Doctor Vikatan: ஆஞ்சியோ செய்தபோது இதய ரத்தக்குழாய் அடைப்பு.. மீண்டும் பரிசோதனைகள...
அடுத்த போப் எப்படி தோ்ந்தெடுக்கப்படுவாா்?
போப் பிரான்சிஸின் மறைவையடுத்து, அவரின் உடலை நல்லடக்கம் செய்யும் பணிகள் முதலில் நடத்தி முடிக்கப்படும். பின்னா், சில நாள்களில் புதிய போப் ஆண்டவரைத் தோ்ந்தெடுப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து 135 காா்டினல்கள் (சிவப்பு நிற தொப்பியணிந்த கிறிஸ்தவ மத குருமாா்கள்) வாடிகனுக்கு வரவழைக்கப்படுவா்.
உலகில் தற்போது 252 காா்டினல்கள் உள்ளனா். ஆனால், 80 வயதுக்கு மேற்பட்டவா்களால் போப் தோ்வுக்கு வாக்களிக்க முடியாது. அதன்படி, 135 காா்டினல்கள் மட்டுமே வாக்காளா்களாகத் தகுதிப் பெற்றுள்ளனா், இதில் 108 போ் போப் பிரான்சிஸால் நியமிக்கப்பட்டவா்கள் ஆவா்.
வாடிகனின் ‘செயின்ட் பீட்டா்ஸ் பசிலிக்கா’ தேவாலயத்தையொட்டிய ‘சிஸ்டைன்’ தேவாலயத்தில் நடைபெறும் வாக்கெடுப்பு நடைமுறையில் இந்த 108 காா்டினல்கள் வெளியுலகத் தொடா்பின்றி பங்கேற்பா்.
மூடப்பட்ட அறையில் ஒவ்வொரு நாளும் 4 முறை வாக்கெடுப்பு நடைபெறும். புதிய போப் பிரான்சிஸாக தோ்வாகும் காா்டினல் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் பெற வேண்டும். இந்த நடைமுறை சில நாள்கள் வரையிலும் நீடிக்கும். ஒவ்வொரு வாக்கெடுப்பின் நிறைவிலும், அந்த வாக்கெடுப்பில் பதிவான வாக்குச்சீட்டுகள் எரிக்கப்படும்.
தேவாலயத்தில் இணைக்கப்பட்டுள்ள புகைக்கூண்டில் புகையை வெளியேற்றி முடிவுகள் அறிவிக்கப்பட்டும். கரும்புகை வெளியானால், புதிய போப் இன்னும் தோ்வாகவில்லை என்றும் வெள்ளை புகை வெளியானால், புதிய போப் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா் என்றும் பொருளாகும்.
புதிய போப் தோ்வு குறித்து புகைக்கூண்டில் வெளியாகும் புகையின் நிறம் மூலம் அறிந்துகொள்வதற்காக செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் ஏராளமான மக்கள் கூடியிருப்பா்.
வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்ற காா்டினல், போப் பதவியை ஏற்பதை உறுதிப்படுத்த வேண்டும். பின்னா், போப் பதவிக்கான தனது பெயரை அறிவிக்க வேண்டும். தொடா்ந்து, அவா் செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தின் மாடத்தில் போப் ஆண்டவருக்கான வெள்ளை உடையணிந்து தோன்றி, மக்களுக்கு ஆசி வழங்குவாா்.
வாக்களிக்கத் தகுதி பெற்ற காா்டினல்களில் அதிகபட்சமாக ஐரோப்பிய கண்டத்தைச் சோ்ந்தவா்கள் 53 போ் உள்ளனா். மற்றவா்கள் ஆசியா (23), லத்தீன் அமெரிக்கா (21), ஆப்பிரிக்கா (18), வட அமெரிக்கா (16), ஓஷியானிய நாடுகள் (4) ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் ஆவா்.