செய்திகள் :

அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தேதிகள் வெளியீடு!

post image

2025 முதல் 2027 வரை 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் நடைபெறும் தேதிகளை பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இறுதிப் போட்டி மே 25-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கான தேதிகளை ஐபிஎல் அணிகளின் நிர்வாகத்துக்கு பிசிசிஐ மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகளை போலவே, 2025 ஐபிஎல் தொடரிலும் மொத்தம் 74 போட்டிகள் இருக்கும் எனத் தெரிகிறது.

இதையும் படிக்க : பார்டர் - காவஸ்கர்: கோலி உள்பட இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்டர்கள் அவுட்!

ஐபிஎல் தேதிகள்

2025 - மார்ச் 14 முதல் மே 25

2026 - மார்ச் 15 முதல் மே 31

2027 - மார்ச் 14 முதல் மே 30

பாகிஸ்தானை தவிர பெரும்பான்மையான வெளிநாட்டு வீரர்கள் தங்களின் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஐபிஎல்லில் விளையாட அனுமதி பெற்றுள்ளனர்.

ஐபிஎல் ஏலம்

செளதி அரேபியா நாட்டில் நாளை மறுநாள் (நவ. 24) முதல் இரண்டு நாள்களுக்கு ஐபிஎல் 2025 போட்டிக்கான மெகா ஏலம் நடைபெறவுள்ளது. மொத்தம் 574 வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் கலந்து கொள்ள பெயர்களை அளித்துள்ளனர்.

கே.எல்.ராகுல் ஆட்டமிழப்பு சர்ச்சை; மிட்செல் ஸ்டார்க் கூறியதென்ன?

சர்ச்சைக்குள்ளான கே.எல்.ராகுலின் விக்கெட் குறித்து ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பேசியுள்ளார்.கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்... மேலும் பார்க்க

பௌன்சர்களை தோளில் வாங்கிக்கொள்; கௌதம் கம்பீரின் அறிவுரையை நினைவுகூர்ந்த நிதீஷ் குமார் ரெட்டி!

பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்குவற்கு முன்பாக கௌதம் கம்பீர் கொடுத்த அறிவுரையை அறிமுக வீரர் நிதீஷ் குமார் ரெட்டி நினைவு கூர்ந்துள்ளார்.கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த இந்... மேலும் பார்க்க

“உலகின் சிறந்த வீரர்...” ஜஸ்பிரித் பும்ராவை பாராட்டிய முன்னாள் வேகப் பந்துவீச்சாளர்!

உலகின் சிறந்த வீரர் ஜஸ்பிரித் பும்ரா என முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அவரைப் பாராட்டியுள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் இ... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: பிளேயிங் லெவனை அறிவித்த மே.இ.தீவுகள்!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.வங்கதேச அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் ... மேலும் பார்க்க

நியூசி. அணி நன்றாக விளையாடியது; இலங்கை தலைமைப் பயிற்சியாளர் பாராட்டு!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய நியூசிலாந்து அணி சிறப்பாக விளையாடியதாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா பாராட்டியுள்ளார்.நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்க... மேலும் பார்க்க

பந்து தாக்கி பலியான ஆஸி.வீரர் பிலிப் ஹூயூஸுக்கு அடிலெய்ட் டெஸ்ட்டில் சிறப்பு மரியாதை!

பந்து தாக்கி பலியான ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹூயூஸ் நினைவாக சிறப்பு மரியாதை செலுத்தப்படவுள்ளது.2014 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி சிட்னியில் நடந்த உள்ளூர் கிக்கெட் போட்டியில் சீன் அப்போர்ட் வீசிய பந்து... மேலும் பார்க்க