செய்திகள் :

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை!

post image

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன்காரணமாக, இன்று (ஆக. 11) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கு(இரவு 7 மணி வரை) திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தேனி, பெரம்பலூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ராகுல் காந்தி கைது: தவெக தலைவர் விஜய் கண்டனம்!

The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in 9 districts, including the Chennai suburbs, for the next 3 hours.

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தைக்கு 2 நாள் சிபிசிஐடி காவல்

கவின் கொலை வழக்கில் கைதான சுர்ஜித் மற்றும் அவரின் தந்தை சரவணனை 2 நாள்கள் சிபிசிஐடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி கோரியிருந்த நிலையில்... மேலும் பார்க்க

பாலியல் வன்கொடுமை: கராத்தே பயிற்சியாளர் குற்றவாளி எனத் தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி பள்ளி நடந்தவர் கெபிராஜ். இவர் தனியார் பள்ளியில் பணி... மேலும் பார்க்க

விஜய் - தூய்மைப் பணியாளர்கள் சந்திப்பு நிறைவு!

பனையூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உடனான தூய்மைப் பணியாளர்களின் சந்திப்பு நிறைவு பெற்றது. 11வது நாளாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், தவெக அலுவலகத்த... மேலும் பார்க்க

விழுப்புரம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்

விழுப்புரம்: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பொறியியல் பணிகள் காரணமாக, ரயில்களின் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி ... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கைது: தவெக தலைவர் விஜய் கண்டனம்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநில... மேலும் பார்க்க

மானநஷ்ட ஈடு வழக்கு! தோனி வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்குரைஞர் ஆணையர் நியமனம்!!

சென்னை: நூறு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட... மேலும் பார்க்க