இந்திய மாணவா்களின் அமெரிக்க விசா ரத்து: எஸ்.ஜெய்சங்கா் நடவடிக்கை எடுப்பாரா? காங...
அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் 3 நாயகிகள்?
அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்திற்குப் பின் இயக்குநர் அல்லு அர்ஜுன் இயக்கத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.
படத்தின் கதை விஎஃப்எக்ஸ் காட்சிகளால் நிறைந்துள்ளதால் ஹாலிவுட்டின் பிரபல விஎஃப்எக்ஸ் நிறுவனங்களிடம் அதற்கான பணிகளை அட்லி ஒப்படைத்திருக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், இப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்காக, பாலிவுட் நடிகைகளில் அட்லி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறாராம். இதில், நடிகை ஜான்வி கபூர் விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ரசிகர்களுக்கு ரெட்ரோ பிடிக்கும்: கார்த்திக் சுப்புராஜ்