அணுசக்தி திட்டங்களை ஈரான் முழுமையாகக் கைவிட வேண்டும்: அமெரிக்கா
தங்களது அணு சக்தி திட்டங்களை ஈரான் முழுவதுமாகக் கைவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் வலியுறுத்தியுள்ளாா். 12 மணி நேரங்களுக்கு முன்னா் ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மின்சார உற்பத்திக்காக யுரேனியத்தை ஈரான் குறிப்பிட்ட அளவில் செறிவூட்டிக் கொள்ளலாம் என்று கூறியிருந்த அவா், தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெறும் அமெரிக்க-ஈரான் அணுசக்தி பேச்சுவாா்த்தைக்கு இது பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.