செய்திகள் :

அணைக்கரை புதிய பாலத்தில் போக்குவரத்து துவக்கம்!

post image

சிதம்பரம்: தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் கீழணையின் மேல் பகுதியில் கட்டப்பட்ட புதிய பாலத்தில் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1836ஆம் ஆண்டு சர் ஆதர் காட்டன் என்பவரால் ஷட்டருடன் கூடிய பாலம் அமைக்கப்பட்டது. இந்த அணை தஞ்சை மாவட்டத்தில் இருந்தாலும் இதன் முழு கட்டுப்பாடு சிதம்பரம் நீர்வளத்துறையால் கண்காணிக்கப்படுகிறது.

இந்த அணையில் காவிரியின் ஒரு பகுதியில் இருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக திறக்கப்படும் தண்ணீர் தேக்கப்பட்டு வடவாறு, வடக்கு, தெற்கு, ராஜன் வாய்க்கால்கள், கும்கி மன்னியாறு, உள்ளிட்ட நீர் வழிகள் வழியாக திறக்கப்பட்டு கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சத்து 31 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மிகப் பழமையான இந்த பாலத்தின் மேல் பகுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு விரிசல் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அணை உடைந்தால் விவசாயம் கேள்விக்குறியாகும் என்ற நிலையில் பாலம் சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டு ஒருவழிப்பாதையாக போக்குவரத்து மாற்றப்பட்டது.

இதன் காரணமாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்பவர்கள் நீண்ட நேரம் பாலத்திற்கு அருகே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் காலை நேரங்களில் பாலத்தை கடக்கும் போது கும்பகோணத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் என பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர். குறிப்பாக பண்டிகை காலங்களில் அணைக்கரை பாலத்தை கார் உள்ளிட்ட சொகுசு வாகனங்களில் கடந்து கும்பகோணம், தஞ்சாவூர் செல்பவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழலும், வாகனங்கள் பல கிலோமீட்டர் நீண்ட வரிசையில் காத்து நிற்கும் அவல நிலையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் சென்னையில் இருந்து விக்கிரவாண்டி, கும்பகோணம், தஞ்சாவூர், மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை 36 சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக கீழணையின் மேல் பகுதியில் இரண்டு கொள்ளிடங்களை இணைக்கும் மிகப்பெரிய பாலம் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் சென்றதாலும் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் பாலம் கட்டும் பணியில் தொடர்ந்து தொய்வு ஏற்பட்டு வந்தது. பல ஆண்டு காலமாக பாலப்பணிகள் நிறைவடையாமல் இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கீழணை பாலம் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.

இதனால் சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலின்றி சென்றது. மேலும், கீழணை பாலத்தில் போக்குவரத்து குறைந்ததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். வருங்காலங்களில் கீழணைக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம்! -இபிஎஸ்

தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி மாணவர்களுக்கான கல்வி நிதியைத் தர மத்திய அரசு மறுக்கிறது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்... மேலும் பார்க்க

திருப்பதி லட்டு விவகாரம்: பால் பொருள்கள் விற்பனை செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு அனுமதி!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனம் நெய் தயாரிக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருப்பதி லட்டுக்கு பயன... மேலும் பார்க்க

உங்கள் குரல் இந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்: கமல்ஹாசன்

உங்கள் குரல் இந்தாண்டு நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டும் துவக்க விழா நடைபெற்றது. இ... மேலும் பார்க்க

ஹிந்தியைத் திணிக்க மத்திய அரசு துடித்துக் கொண்டிருக்கிறது: அமைச்சர் சாமிநாதன்

மூன்றாவது மொழியைத் திணிப்பதற்கு மத்திய அரசு துடித்துக் கொண்டிருப்பதாக கோவையில் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். உலக தாய்மொழி தினத்தையொட்டி ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் ... மேலும் பார்க்க

5 ஆண்டுகளில் ஒசூர் மிகப்பெரிய வளர்ச்சி அடையும்: அமைச்சர் டி.ஆர்.டி. ராஜா

ஒசூர்: 5 ஆண்டுகளில் ஒசூர் மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருவதாக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் ஒசூரில் இரண்ட... மேலும் பார்க்க

அடுத்த 3 நாள்களுக்கு வெய்யில் அதிகரிக்கும்!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாள்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெய்யில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 21-02-2025 மற்றும் 22-02... மேலும் பார்க்க