தமிழகத்தில் ரூ.40 கோடியில் நவீன தொழில்நுட்ப மையங்கள் திறந்து வைப்பு!
அண்ணலின் பெயர் எங்களுக்கு ஃபேஷன் அல்ல ஃபயர்: சு.வெங்கடேசன் எம்.பி.
அண்ணலின் பெயர் எங்களுக்கு ஃபேஷன் அல்ல ஃபயர் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது காங்கிரஸ் கட்சியினருக்கு வழக்கம் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்.
மேலும் அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் சொல்வதில் பாஜக மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அம்பேத்கரின் உண்மையான உணர்வுகளையும் காங்கிரஸ் பேச வேண்டும் என்று அமித் ஷா கூறினார்.
இந்த நிலையில், அம்பேத்கரின் பெயரை சொல்வது காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமாகிவிட்டதாக கூறிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், அம்பேத்கரை அவமதித்ததற்காக அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க |பாஜக, ஆர்எஸ்எஸ் மூவர்ணக் கொடிக்கு எதிரானது: கார்கே விமர்சனம்
இந்த நிலையில், அண்ணலின் பெயர் எங்களுக்கு ஃபேஷன் அல்ல ஃபயர் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“அம்பேத்கரின் பெயரை சொல்லுவது பேஷன் ஆகிவிட்டது” என்கிறார் அமித்ஷா
உங்களுக்கு இவ்வளவு எரிச்சலை கொடுக்கும் அண்ணலின் பெயர் எங்களுக்கு ஃபேஷன் அல்ல ஃபயர் என கூறியுள்ள வெங்கடேசன், இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவப்படத்தின் முன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.