செய்திகள் :

அதிகாரத்தில் இருந்தவர்களுக்காக சட்டதிருத்தம் செய்த காங்கிரஸ்: நிர்மலா சீதாராமன்

post image

அதிகாரத்தில் இருந்தவர்களை பாதுகாப்பதற்காகவே அரசமைப்பு சட்டத்தை காங்கிரஸ் திருத்தியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமையான இன்று காலை வழக்கம்போல் மாநிலங்களவை கூடியது.

இந்த நிலையில், அவையில் அரசியலமைப்புச் சட்ட விவாதத்தை நிர்மலா சீதாரான் தொடங்கி வைத்தார். இதையடுத்து, அதிகாரத்தில் இருப்பவர்களைக் காக்கவே அரசியல் சட்டத்தில் காங்கிரஸ் திருத்தம் செய்தது.

1949ல் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், 1949ல் மில் தொழிலாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் ஜவஹர்லால் நேருவுக்கு எதிராக எழுதிய கவிதையை வாசித்ததால் மஜ்ரூஹ் சுல்தான்புரி மற்றும் பால்ராஜ் சாஹ்னி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அது சகிப்புத் தன்மையின்மையின் உச்ச நிலையாகும் என்றார்.

அரசியல் சட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு, வாக்களிக்கச் செல்கிறார்கள், பேச்சு சுதந்திரத்தைப் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் இன்னும் "நாட்டில் அச்ச உணர்வு இருக்கிறது" என்று காங்கிரஸை விமர்சித்தார்.

1988ல் நேருவின் வாழ்க்கை வரலாறு பற்றிய 'கிஸ்ஸா குர்சி கா' என்ற திரைப்படத்திற்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 'சாத்தானிக் வெர்சஸ்" புத்தகமும் தடை செய்யப்பட்டது. பத்திரிக்கை சுதந்திரத்தைக் குறைக்கும் இந்த களியாட்டம் 1949-50 காலப்பகுதியில் நடந்தது, அது தொடர்கிறது என்று சீதாராமன் கூறினார்.

மேலும், நீதித்துறை அவமதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். "இந்திரா காந்தி வெர்சஸ் ராஜ் நரேன் வழக்கில் இந்திரா காந்தியின் தேர்தலை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்த தீர்ப்பை ரத்து செய்ய அரசியலமைப்புத் திருத்தம் செய்யப்பட்டது." மறைந்த பிரதமர் இந்திரா காந்தி நீதிமன்றத்திற்கு எதிராக முடிவுகளை எடுத்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு, 50-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களுக்கான தனி அரசமைப்பை உருவாக்கின. அரசமைப்பு திருத்தங்கள் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக அல்ல, மாறாக அதிகாரத்தில் இருப்பவர்களை பாதுகாப்பதற்காக என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால், இந்திய அரசமைப்பு வலுவாக உள்ளதாகவும், வளமான இந்தியாவைக் கட்டமைக்க அரசமைப்பைப் பாதுகாப்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மீனவர்கள் விவகாரம்: இலங்கை அதிபரிடம் எழுப்ப ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுதில்லி: மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை அதிபரிடம் எழுப்ப வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். 3 நாள் பயணமாக அநுர குமார இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை(டிச. 15) வர... மேலும் பார்க்க

தனது தோல்விகளை மறைக்க நேரு மீது பிரதமா் மோடி வீண் பழி: காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் நரேந்திர மோடி தனது ஆட்சியின் தோல்விகளை மறைக்க நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு மீது வீண் பழி சுமத்துவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. ‘முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு முதல் தற்போதைய ... மேலும் பார்க்க

பிரதமர் மோடி கடந்த காலத்தில் வாழ்கிறார்: கார்கே

பிரதமர் மோடி ஜவஹர்லால் நேரு எழுதிய கடிதத்தைத் தவறாகத் திரித்து மக்களை ஏமாற்றி வருவதாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று விமர்சித்துள்ளார். 1951ல் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்ப... மேலும் பார்க்க

மீனவர்கள் விவகாரத்தில் நிலையான தீர்வு: இலங்கை அதிபர்

மீனவர்கள் விவகாரத்தில் நிலையான தீர்வு காண விரும்புவதாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு மூன்று நாள்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள திசநாயக, புதுதில்லியில்... மேலும் பார்க்க

மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறைக்கு இலங்கை அதிபர் ஒப்புதல்! மோடி

மீனவர்கள் விவகாரத்தில் மனிதாபிமான அணுகுமுறை நோக்கிச் செல்ல இலங்கை அதிபருடனான பேச்சில் இருவரும் ஒப்புக் கொண்டதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.மூன்று நாள்கள் அரசு முறை பயணமாக இந்தியா ... மேலும் பார்க்க

பாலஸ்தீன் சின்னம் பொறித்த கைப்பையுடன் நாடாளுமன்றம் வந்த பிரியங்கா காந்தி!

பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ’பாலஸ்தீன்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட கைப்பையை பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன்றத்துக்கு எடுத்துவந்தார். காங்கிரஸ் பொதுச் செயலாலாரும் வயநாடு தொகுதி எம்பி... மேலும் பார்க்க