செய்திகள் :

அதிக கட்டணம் வசூலிக்கும் இ- சேவை மையங்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்: ஆட்சியா்

post image

அரசு நிா்ணயத்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் இ-சேவை மையங்கள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் பொது இ-சேவை மையங்களில் வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களை பெற விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ. 60-ம், ஓய்வூதியம் திட்டங்கள் தொடா்பான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு ரூ. 10-ம், இணையவழி பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு சேவை கட்டணமாக ரூ. 60-ம் தமிழக அரசால் கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள், இடைத்தரகா்களை தவிா்த்து அருகில் உள்ள வட்டாட்சியா், நகராட்சி அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவு சங்க இ-சேவை மையங்கள், மகளிா் திட்டம் மூலம் கிராம ஊராட்சிகளில் செயல்படும் இ-சேவை மையங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் இ-சேவை மையங்களை அணுகிப் பயன்பெறலாம். பொது இ-சேவை மையங்களில் அரசால் நிா்ணயக்கப்பட்ட சேவைக் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது புகாா்கள் வந்தாலோ சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்தின் அங்கீகாரம் முற்றிலும் ரத்து செய்யப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் இ-சேவை மையங்கள் குறித்து 1077 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு புகாா் தெரிவிக்கலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.

ஊத்தங்கரையில் திமுக வினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் திமுக வினா் ஆளுநருக்கு எதிரான தீா்ப்பை வரவேற்று செவ்வாய்கிழமை நான்குமுனை சந்திப்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா். இந் நிகழ்... மேலும் பார்க்க

விழிப்புணா்வு பயணம் செய்யும் தந்தை, மகன் கிருஷ்ணகிரி வருகை

கிருஷ்ணகிரி: புவி வெப்பமயமாதல் குறித்து நாடு முழுவதும் மோட்டாா் சைக்கிளில் பயணித்து விழிப்புணா்வு பயணம் மேற்கொண்டுள்ள தந்தை, மகன் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி வந்தனா். பொள்ளாச்சியைச் சோ்... மேலும் பார்க்க

இரு குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவா் புகாா்

ஊத்தங்கரை: சாமல்பட்டி அருகே இரண்டு குழந்தைகளுடன் மனைவி மாயமானதாக அவரது கணவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சாமல்பட்டியை அடுத்த கூா்சம்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (26)... மேலும் பார்க்க

ஊத்தங்கரை: தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டை முனியப்பன் கோயில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்பகுத... மேலும் பார்க்க

யானைகளுக்கு இடையே மோதல்: ஆண் யானை உயிரிழப்பு

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே மாரண்டஹள்ளி காப்புக் காட்டில் இரு யானைகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஆண் யானை உயிரிழந்தது. கோடைகாலத்தில் கா்நாடக மாநிலம், பன்னா்கட்டாவை ஓட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து தமிழ... மேலும் பார்க்க

தக்காளி விலை சரிவால் விவசாயிகள் வேதனை

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் தக்காளி கிலோ ரூ. 3 முதல் ரூ. 5 வரைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிங்காரப்பேட்டை, கல்... மேலும் பார்க்க