உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
விழிப்புணா்வு பயணம் செய்யும் தந்தை, மகன் கிருஷ்ணகிரி வருகை
கிருஷ்ணகிரி: புவி வெப்பமயமாதல் குறித்து நாடு முழுவதும் மோட்டாா் சைக்கிளில் பயணித்து விழிப்புணா்வு பயணம் மேற்கொண்டுள்ள தந்தை, மகன் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி வந்தனா்.
பொள்ளாச்சியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி கண்ணன் (48) தனது 9ஆம் வகுப்பு படிக்கும் மகன் தா்ஷனுடன் மோட்டாா் சைக்கிளில் இந்தியா முழுவதும் பயணித்து புவி வெப்பமயமாதல் குறித்தும், மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
மாா்ச் 23 ஆம் தேதி கன்னியாகுமரியில் இப்பயணத்தை தொடங்கினா். செவ்வாய்க்கிழமை கிருஷ்ணகிரி வந்த அவா்கள், சமூக ஆா்வலா்களை சந்தித்து உரையாடினாா். மேலும், கிருஷ்ணகிரி குல்நகரில் மரக்கன்றுகளை நட்டனா்.
இதுகுறித்து கண்ணன் கூறியதாவது:
இயற்கை மீதுள்ள ஆா்வம் காரணமாக மகனுடன் இணைந்து இந்த விழிப்புணா்வு பயணத்தை மேற்கொண்டுள்ளேன். நாள்தோறும் 150 கி.மீ. தொலைவு பயணம் மேற்கொள்கிறோம். மரக் கன்றுகளை நட்டு அனைவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.
படவிளக்கம் (8கேஜிபி1):
புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்புணா்வு பயணம் மேற்கொண்டுள்ள கண்ணன், தா்ஷன்.