விராட் கோலி, தேவ்தத் படிக்கல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 206 ரன்கள் இலக்கு!
அதிக விக்கெட்டுகள்: மலிங்காவின் சாதனையை சமன்செய்த பும்ரா!
மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா முன்னாள் வீரரும் தற்போதைய பயிற்சியாளருமான லாசித் மலிங்காவின் சாதனையை சமன்செய்துள்ளார்.
இந்தியன் பிரீமியா் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேற்றிரவு (ஏப்.23) நடைபெற்ற போட்டியில் வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் ஜஸ்பிரீத் பும்ரா 19ஆவது ஓவரில் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த கிளாசன் விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்த (170) மலிங்காவின் சாதனையை சமன்செய்துள்ளார்.
மலிங்கா இந்த 170 விக்கெட்டினை தனது 122 போட்டிகளில் எடுக்க பும்ராவுக்கு 138 போட்டிகள் தேவைப்பட்டுள்ளன.
இந்த விக்கெட்டுடன் பும்ரா டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகள் என்ற புதிய மைல்கல்லையும் தொட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸுக்காக அதிக விக்கெட்டுகள்
1. லாசித் மலிங்கா - 170
2. ஜஸ்பிரீத் பும்ரா - 170
3. ஹர்பஜன் சிங் - 127
4. மிட்செல் மெக்லாஹன் - 71
5. கைரன் பொல்லார்ட் - 69
Different eras. Same dominance.
— Mumbai Indians (@mipaltan) April 24, 2025
Mali & Boom - side by side at the #MumbaiIndians#PlayLikeMumbai#TATAIPL#SRHvMIpic.twitter.com/ET5waGnOpM