'Kamal சார் ரொம்ப பெரிய மனுஷன்' - Vijayasethupathi | Bigg Boss 8 Review
அதிதீஸ்வரா் கோயிலில் காலபைரவாஷ்டமி விழா
வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியில் அமைந்துள்ள சுயம்பு அதிதீஸ்வரா் கோயிலில் ஸ்ரீ காலபைரவாஷ்டமி பெருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 3 மணியளவில் மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜையும், மாலை 4.30 முதல் 6 மணி வரை காலபைரவ பரிகார ஹோமமும், இரவு 7 மணி அளவில் கலச அபிஷேகம், அலங்காரமும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில், வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.