America: ``ட்ரம்பா - எலான் மஸ்கா" அமெரிக்காவின் அதிபர் யார்? - விமர்சனங்களும் பி...
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! இன்றும் புதிய உச்சம்!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை ரூ. 840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பின்னர் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. இந்நிலையில், மக்களவையில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டால், தங்கம் விலை குறையும் என்று எதிர்பாா்க்கப்பட்டது.
ஆனால், எந்த அறிவிப்பும் வராததால் சனிக்கிழமை சவரனுக்கு மேலும் ரூ.480 உயர்ந்து ரூ.62,320-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
வார தொடக்க நாளான திங்கள்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.7,705-க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கும் விற்பனையானது.
இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல பக்தர்களுக்குத் தடை!
புதிய உச்சத்தில் தங்கம் விலை
இந்த நிலையில், இன்று(பிப். 4) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 105 உயர்ந்து ரூ. 7810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மெக்சிகோ, சீனா, கனடா ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டதும் மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லாததாலும் தங்கம் விலை உயர்ந்து வருவதாக தங்க நகை வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வெள்ளி விலை குறைவு
வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 106-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ. 1,06,000-க்கும் விற்பனையாகிறது.