செய்திகள் :

அதிரடி பேட்டிங் என்றால் என்ன? வெங்கடேஷ் ஐயரின் முழுமையான பேட்டி!

post image

அதிக விலைக்கு வாங்கியதால் எல்லா போட்டிகளிலும் ரன்கள் குவிக்க முடியுமா என வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார்.

சன்ரைசர்ஸ் அணியுடனான் போட்டியில் கேகேஆர் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் 29 பந்துகளில் 60 ரன்கள் குவித்து வெங்கடேஷ் ஐயர் அசத்தினார்.

206.9 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய இவருக்கு சூப்பர் ஸ்டிரைக்கர், அதிக பவுண்டரிகள் என பல விருதுகள் கிடைத்தன.

ஐபிஎல் ஏலத்தில் ரூ.23.75 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தார். முதல் சில போட்டிகளில் சரியாக விளையாடாததால் விமர்சனம் எழுந்த நிலையில் போட்டி முடிந்த பிறகு வெங்கடேஷ் ஐயர் பேசியதாவது:

அதிக தொகை, அதிக அழுத்தம்?

நான் பொய் சொல்லாமல் சொல்கிறேன். அதிக விலைக்கு வாங்கியது சிறிது அழுத்தமாகத்தான் இருந்தது. நீங்கள் (ஊடகங்கள், வர்ணனையாளர்கள்) அதிகமாக பேசுகிறீர்கள்.

கேகேஆர் அணியில் அதிகமான தொகையில் வாங்கப்பட்டதால் அனைத்து போட்டிகளிலும் ரன்களை குவிக்க வேண்டிய அவசியமில்லை.

எப்படி அணிக்கு வெற்றிபெற உதவுகிறேன் என்பதும் என்ன மாதிரியான தாக்கத்தை உருவாக்கிறேன் எனபதும்தான் முக்கியமானது.

தாக்கம்தான் முக்கியம்

எவ்வளவு பணம் வாங்கினேன் அல்லது எவ்வளவு ரன்கள் அடித்தேன் என்பது எனக்கு அழுத்தமில்லை. அது எனக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியதில்லை.

சரி நீங்களே சொல்லுங்கள், எப்போது அந்த அழுத்தம் வெளியேறும்?

நான் ஐபிஎல் தொடங்கியதில் இருந்து சொல்லி வருகிறேன். 20 லட்சமோ அல்லது 20 கோடியோ அது முக்கியமில்லை. ஒரு அணி வெற்றிபெற எப்படி உதவ முடியுமோ அதைத்தான் நான் செய்ய முடியும்.

பிட்சை குறைகூறக் கூடாது

சில நேரங்களில் எனக்கு மிகவும் சிக்கலான சூழ்நிலைகள் வரும். என்னுடைய வேலை சில ஓவர்களை அடித்து ஆடுவது. என்னால் ரன்களை அடிக்க முடியாவிட்டாலும் அணிக்காக வேலைப் பார்க்கிறேன்.

இந்த ஆடுகளம் நல்ல சவாலான ஒன்று. நாங்கள் சிறப்பாக பந்து வீசினோம். ஈடர்ன் கார்டனில் தேவையான அளவுக்கு ரன்களை குவித்தோம். பிட்சை நன்றாக பயன்படுத்தினோம்.

பிட்ச் இப்படி வேலை செய்யுமென நான் எப்போதும் நினைத்து பார்ப்பதில்லை. நாம் தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள். எப்படி இருந்தாலும் விளையாட வேண்டும். ஆனால், சொந்த மண்ணில் இப்படி கிடைப்பது எங்களுக்கு சிறந்ததுதான்.

அதிரடி பேட்டிங் என்றால் என்ன?

ஆக்ரோஷமாக விளையாடுவதின் அடிப்படை நேர்மறையான நோக்கத்துடன் விளையாடுவது. அதிரடியாக விளையாடுவது அனைத்து பந்துகளையும் சிக்ஸர் அடிக்க முயற்சிப்பதல்ல.

சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அதிலிருந்து எப்படி அணியின் வசமாக்க முடியுமோ அதுதான் புத்திசாலித்தனம்.

அடித்தால் 250 அல்லது இல்லையேல் 70 ரன்கள் என இருக்க விரும்பவில்லை.

சூல்நிலை உடனடியாக உணர்ந்து அந்தப் பிட்சுக்கு எவ்வளவு ரன்கள் தேவையோ அதிலிருந்து கூடுதலாக 20 ரன்கள் அடிக்க முயற்சிப்போம். அதுதான் கேகேஆரின் அதிரடி.

ரஹானே, ரகுவன்ஷியுடனான உரையாடல் முக்கியமானது. அனைத்து பந்துகளையும் அடிக்க முடியாது. நேரமெடுத்து பிட்ச்சுக்கு ஏற்றவாறு விளையாட வேண்டுமென முடிவெடுத்தோம் என்றார்.

அதிரடி காட்டிய கே.எல்.ராகுல்: 38-ஆவது ஐபிஎல் அரைசதம்!

தில்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் கே.எல்.ராகுல் தனது 38ஆவது ஐபிஎல் அரைசதத்தினை நிறைவு செய்தார். சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி பேட்டிங்கை தேர்வு செய்தது. டு பிளெஸ்ஸி விளையாடாததால் கே.எ... மேலும் பார்க்க

ருதுராஜ்தான் கேப்டன்: டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்!

காயம் காரணமாக விலகுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் ருதுராஜ் களமிறங்கியுள்ளார். ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்று சேப்பாகில் நடைபெறும் 17-வது போட்டியில... மேலும் பார்க்க

அம்மா, இது நள்ளிரவு 12.08..! செய்தியாளரின் அம்மாவிடம் பேசிய லக்னௌ பயிற்சியாளர்!

நேற்றிரவு நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்குப் பிறகான செய்தியாளர் சந்திப்பில் லக்னௌ அணியின் தலை... மேலும் பார்க்க

லக்னௌ கேப்டனுக்கு அபராதம்: 2-ஆவது முறையாக திக்வேஷுக்கு அபராதம்!

மெதுவாக பந்துவீசியதற்காக லக்னௌ கேப்டன் ரிஷப் பந்துக்கு ரூ.12 லட்சம் அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.மும்பை இந்தியன்ஸ் உடனான நேற்றைய போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ த்ரில் வெற்றி பெற்றது. இந்தப... மேலும் பார்க்க

போட்டியின் நடுவே திலக் வர்மாவை வெளியேற்றியது ஏன்? மௌனம் கலைத்த பாண்டியா!

திலக் வர்மாவை ஆட்டத்தின் கடைசியில் வெளியேற்றியது (ரிட்டையர்டு ஹர்ட்) சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. நேற்றிரவு மும்பை, லக்னௌ அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னௌ 203/8 ரன... மேலும் பார்க்க

மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டனாகிறாரா எம்.எஸ்.தோனி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் மகேந்திர சிங் தோனி செயல்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நாளை நடைபெறும் 17-வத... மேலும் பார்க்க