செய்திகள் :

25 ஆண்டுகளுக்குப் பிறகு கிளப் அணியிலிருந்து விலகும் வரலாற்று நாயகன்!

post image

பிரபல கால்பந்து வீரர் தாமஸ் முல்லர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மன் கிளப்பை விட்டுப் பிரிகிறார்.

ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பெயர்ன் மியூனிக் அணிக்காக 25 ஆண்டுகளாக விளையாடிவரும் தாமஸ் முல்லர் இந்த சீசனோடு அணியை விட்டு பிரிகிறார்.

பெயர்ன் மியூனிக் அணிக்காக 743 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த அணிக்காக ஒருவர் அதிகமான போட்டிகளில் விளையாடியதில் இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.

கடந்த 2,000ஆம் ஆண்டில் இந்த அணியில் சேர்ந்த தாமஸ் முல்லர் அட்டாகிங் மிட்ஃபீல்டர், செகண்ட் ஸ்டிரைக்கராக விளையாடி வந்தார்.

12 முறை புன்டெஸ்லீகா தொடரினையும் 2 முறை சாம்பியன்ஸ் லீக்கையும் 6 டிஎஃப்எக்ஸ் பட்டங்களையும் வென்றுள்ளார்.

தொடர்ச்சியாக 11 முறை புன்டெஸ்லீகா தொடரினை வென்றதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

பெயர்ன் மியூனிக் அணிக்காக 3-ஆவதாக அதிக கோல்கள் (247) அடித்துள்ளார். முதலிரண்டு இடங்களில் ஜெரால்ட் முல்லர் (565), லெவண்டாவ்ஸ்கி (344) இருக்கிறார்கள்.

சர்வதேச போட்டிகளில் 2024இல் ஓய்வை அறிவித்த தாமஸ் முல்லர் இந்த சீசனோடு பெயர் மியூனிக் கிளப் அணியில் இருந்தும் விலகுகிறார்.

ஜூன் 30 உடன் அவரது ஒப்பந்தம் முடிவடைகிறது. கிளப் உலகக் கோப்பை ஜூன் 14ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பை குத்துச்சண்டை: இறுதிச் சுற்றில் அவினாஷ் ஜம்வால்

உலகக் கோப்பை குத்துச்சண்டை (வோ்ல்ட் பாக்ஸிங் கப் பிரேஸில் 2025) போட்டியில் ஆடவா் 65 கிலோ பிரிவில் இந்தியாவின் அவினாஷ் ஜம்வால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற அரையிற... மேலும் பார்க்க

நெல்சன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர்?

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் நெல்சன் நடிகர் ரஜினியை வைத்து இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

எம்புரானில் நடித்த இந்த நடிகர் யார் தெரியுமா?

எம்புரானில் அறிமுகமான நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படம் வெளியான நாள்முதல் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் விமர்சனங்களைச் சந்தித்தாலும் ரூ. 250 கோடிக்... மேலும் பார்க்க

ஓடிடியில் வெளியான மர்மர்!

திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற மர்மர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.அறிமுக இயக்குநர் ஹேம்நாத் நாராயணன் இயக்கத்தில் நடிகர்கள் ரிச்சி கபூர், தேவராஜ் ஆறுமுகம், யுவனிகா ராஜேந்திரன் நடிப்பில் ... மேலும் பார்க்க

2 கோடி பார்வைகளைக் கடந்த குட் பேட் அக்லி டிரைலர்!

குட் பேட் அக்லி டிரைலர் யூடியூபில் 2 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. அஜித்தின் முந்தைய படமான விடாமுயற்சி படம் சரியா... மேலும் பார்க்க

பிரதமருக்கு இலங்கையின் உயரிய விருது - புகைப்படங்கள்

இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய விர... மேலும் பார்க்க