ரயில்வே விரிவாக்க பணிக்காக சாலை துண்டிப்பு: எதிா்க்கட்சித் தலைவா் பேச்சுவாா்த்தை...
புற்றுநோயால் அவதியுறும் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை!
புற்றுநோயால் அவதியுறும் 13 வயது சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் மகாராஷ்டிரத்தில் நிகழ்ந்துள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள சிறுமி மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள தமது வீட்டில் தனியாக இருந்தபோது இந்த கொடுமை நிகழ்ந்துள்ளது. இந்த வழக்கில் 29 வயது நபர் ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், பிகார் மாநிலத்தில் பதுங்கியிருந்த அவர் காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையிலுள்ள ஒரு மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை பெறும் அந்த சிறுமிக்கு தேவையான உதவிகளை, மேற்கண்ட குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரின் குடும்பம் செய்து கொடுத்து உதவியாக இருந்து வந்துள்ளனர். அந்த நபரின் குடும்பத்தாரும் பிகாரிலுள்ள சிறுமியின் பூர்வீக கிராமத்தைச் சேர்ந்தோராவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், மருத்துவமனைக்குச் சென்றிருந்த மாணவிக்கு புற்றுநோய் சிகிச்சைக்கான வழக்கமான பரிசோதனையின்போது, அவர் கர்ப்பமடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சிறுமி நடந்த விஷயத்தை அனைவரிடமும் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக போக்சோ வழக்குப்பதிந்துள்ள காவல் துறையினர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.