அதிரடி காட்டிய கே.எல்.ராகுல்: 38-ஆவது ஐபிஎல் அரைசதம்!
தில்லி கேபிடல்ஸ் அணியின் வீரர் கே.எல்.ராகுல் தனது 38ஆவது ஐபிஎல் அரைசதத்தினை நிறைவு செய்தார்.
சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி பேட்டிங்கை தேர்வு செய்தது.
டு பிளெஸ்ஸி விளையாடாததால் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்கினார்.
இந்தப் போட்டியில் முதல் ஓவரிலேயே தொடக்க வீரர் ஜேக் பிரேசர் மெக்கர்க் ஆட்டமிழந்தார்.
பொறுமையாக விளையாடிய கே.எல்.ராகுல் 33ஆவது பந்தில் தனது அரைசத்தினை நிறைவு செய்தார்.
கே.எல்.ராகுல் 134 ஐபிஎல் போட்டிகளில் 4, 774 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 சதங்கள், 38 அரைசதங்கள் அடங்கும்.
லக்னௌ அணியில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய கே.எல்.ராகுல் தில்லி அணியில் பேட்டராக விளையாடி வருகிறார்.
51 பந்துகளில் 77 ரன்களுக்கு பதிரானா ஓவரில் ஆட்டமிழந்தார்.