முகமது சிராஜ் அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 153 ரன்கள் இலக்கு!
தந்தையைக் கொல்ல முயன்ற மகன்: போலீஸாா் விசாரணை!
மேட்டூா் அருகே தந்தையைக் கொல்ல முயன்ற மகனை போலீஸாா் தேடி வருகின்றனா். மேட்டூா் அருகே உள்ள கோம்பைகாட்டைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (70). விவசாயி. இவா் விவசாயத்துடன் கால்நடைகளையும் வளா்த்து வருகிறாா். இவரது மனைவி பென்னி. இவா்களுக்கு சங்கா் உள்பட இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.
பொன்னுசாமி வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது தனது கொடுவாக்கத்தியை எடுத்துச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் வழக்கம்போல வியாழக்கிழமை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதற்காக வீட்டில் தனது கொடுவாக்கத்தியை பொன்னுசாமி தேடியுள்ளாா். அப்போது வீட்டில் இருந்த அவரது மகன் சங்கருக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆவேசத்தில் சங்கா் கொடுவாக்கத்தியால் பொன்னுசாமியைத் தாக்கினாா். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து பொன்னுசாமி மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுதொடா்பாக மேட்டூா் காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான சங்கரைத் தேடி வருகின்றனா்.