அதிர்ஷ்டம் யாருக்கு இந்த வாரம்: வார பலன்கள்!
தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 6 - 12) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
இடையூறுகளைத் தகர்ப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிடைக்கும். பூர்விக சொத்துகளில் வில்லங்கம் விலகும். பொருளாதாரம் மேன்மையடையும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடப்பீர்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். விவசாயிகள் எதிர்பார்த்த வருவாயைப் பெறுவீர்கள். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்
அரசியல்வாதிகள் கவனமாகச் செயல்படுவீர்கள். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்கள் கணவரிடம் அன்பைப் பெறுவீர்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெற்றோரை அனுசரித்து நடப்பீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். மகிழ்ச்சியான பயணம் செய்ய நேரிடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் புகழ் உயரும். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் இணக்கமாகப் பழகுவீர்கள்.
விவசாயிகள் அமோக விளைச்சலைக் காண்பீர்கள். அரசியல்வாதிகள் கவனமாக இருக்கவும். கலைத் துறையினருக்குப் பணவரவு உண்டு. பெண்கள் கவனமாகப் பேசவும். மாணவர்கள் விரும்பிய பாடப் பிரிவுகளைச் சேர்ந்து மகிழ்ச்சி அடைவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
பொருளாதாரத் தடைகள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். உறவினர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்பனை உயரும். விவசாயிகள் உங்களுக்குக் கீழ்பணிபுரிவோரை அனுசரித்து நடப்பீர்கள்.
அரசியல்வாதிகள் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். கலைத் துறையினர் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்கள் பொருளாதார வளர்ச்சியில் திருப்தி அடைவீர்கள். மாணவர்கள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)
புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். ரகசியங்களைப் புரிந்துகொள்வீர்கள். உற்சாகத்துடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தன்னம்பிக்கையும் திறமைகளும் உயரும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் சிறக்கும். விவசாயிகளுக்கு வருமானம் பலவகைகளில் வந்து சேரும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் அன்பைப் பெறுவீர்கள். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். மாணவர்களுக்கு வெளிவிளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் முதல் பாதம் முடிய)
மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். தொழிலில் சிறுமாற்றங்களைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். வியாபாரிகள் அதிக விலைக்கு வாங்கி, பொருள்களை விற்பீர்கள். விவசாயிகளின் முயற்சிகள் வெற்றியடையும்.
அரசியல்வாதிகள் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். கலைத் துறையினர் எதிர்பார்த்த வளர்ச்சியைப் பெறுவீர்கள். பெண்கள் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். மாணவர்கள் எதிர்காலச் சிந்தனையுடன் செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)
வாக்குறுதிகளைக் காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் பேச்சுக்கு மதிப்பு உயரும். திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி நிறையும்.
உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராமல் சலுகைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பீர்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் லாபம் உண்டாகும்.
அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரையும் அனுசரித்து நடப்பீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களுக்கு உதவுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்
மனக் குழப்பங்களை விலகி தெளிவு பிறக்கும். பொருளாதார நிலை சீரடையும். எடுத்தக் காரியங்கள் நிறைவேறும். பயணங்களால் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரிகள் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விவசாயிகளுக்கு உற்பத்தி நன்றாக இருக்கும்.
அரசியல்வாதிகள் மேலிடத்துக்குத் தகவல் அனுப்பும்போது கவனமாக இருக்கவும். பெண்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வுகளில் மகிழ்ச்சி அடைவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
பொருளாதாரம் சிறக்கும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். தொழிலில் சிறுமாற்றங்களைச் செய்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை கூடினாலும், திட்டமிட்ட காலத்துக்குள் முடியும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். விவசாயிகள் வயல் பிரச்னைகளைப் பொறுமையுடன் கையாள்வீர்கள்.
அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். கலைத் துறையினர் பிறருக்கு உதவுவார்கள். பெண்கள் பெற்றோர் உடல்நலத்தைக் கவனிக்க வேண்டிவரும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். சிந்தனைச் சக்தி பலப்படும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளுடனான மனக் கசப்பு நீங்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தவிர்த்திடுங்கள். விவசாயிகள் கால்நடைகளால் நன்மை அடைவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு குறைந்து காணப்படும். கலைத் துறையினர் சீரான பணவரவைக் காண்பீர்கள். பெண்கள் கவனமாக இருக்கவும். மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)
நண்பர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். உடல் ஆரோக்கியமும், மனவளமும் மேம்படும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். முகத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும்.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பிரச்னைகள் குறையும். வியாபாரிகளுக்குப் பணப்புழக்கம் சீராகும். விவசாயிகளுக்கு உற்பத்தியில் நல்ல லாபம் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் ரகசியங்களை வெளியிட மாட்டீர்கள். மாணவர்களுக்கு அறிவு மேம்படும்.
சந்திராஷ்டமம் - இல்லை.
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)
பணப்புழக்கம் அதிகரிக்கும். வெற்றியைச் சந்திப்பீர்கள். நல்லோரின் உதவியும், அறிவுரையும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்னல்களைச் சமாளிப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகள் கடையை விரிவாக்கம் செய்வீர்கள். விவசாயிகளுக்கு பணிகள் சுமுகமாக முடியும்.
அரசியல்வாதிகள் தொண்டர்களின் குறைகளைத் தீர்ப்பீர்கள். கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெண்களுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் மேல்படிப்புக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூன் 6.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
தொழிலில் புதிய நுணுக்கங்களைப் புரிந்துகொள்வீர்கள். தன்னம்பிக்கையும் தனித்திறமையும் உயரும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் புதிய கடன்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு சிரமங்கள் குறையும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதிகள் புதிய பதவிகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.
சந்திராஷ்டமம் - ஜூன் 7,8.