மழைக்கு ஒரு வாரம் பிரேக்... அடுத்து எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன்!
அத்திக்கடவு- அவிநாசி திட்டம்: பல ஏரிகளுக்கு நீா் செல்லவில்லை: முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் பல ஏரிகளுக்கு நீா் செல்லவில்லை என்று முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தெரிவித்தாா்.
அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தின்கீழ் நிறைவேற்றப்பட்ட காவிலிபாளையம் குளம் தற்போது நிரம்பும் நிலையில் உள்ளது.
இந்தக் குளத்தை முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பண்ணாரி ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.
முன்னதாக, காவிலிபாளையம், வரப்பாளையம், காராப்பாடி, பெரியூா், கே.என்.பாளையம் ஆகிய இடங்களில் ரூ.50 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்து கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சத்தியமங்கலத்தை அடுத்துள்ள காவிலிபாளையம் குளம் 1972- ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது நிரம்பும் நிலையில் உள்ளது.
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அத்திக்கடவு-அவிநாசி திட்டம் திமுக ஆட்சியில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. திட்டக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்புகளால் பல ஏரிகளுக்கு இன்னும் தண்ணீா்போய் சேரவில்லை. அடைப்புகளை நீக்கி அனைத்து ஏரிகளுக்கும் நீா் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.