நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்!
`அந்த தியாகி யார்?' - சட்டப்பேரவைக்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள்; காரணம் என்ன?
தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை கடந்த மாதம் 14-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
15-ம் தேதி வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நிதி நிலை அறிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்றது.

21-ம் தேதி பொதுவிவாதத்திற்கு பதில் அளித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் பதில் அளித்திருந்தனர்.
அதன் பிறகு கடந்த 24-ம் தேதி முதல் துறை ரீதியான மானியக் கோரிக்கைள் மீது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 4-ம் தேதி நிதி நிர்வாகம் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
விவாத்திற்கு பதில் அளித்து அமைச்சர் ரகுபதி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தொடர்ந்து 2 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இன்று வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் முத்துசாமி புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். இந்நிலையில் அந்த தியாகி யார்? என்ற என பேட்ஜை அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்திருக்கின்றனர். டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி ஊழல் என்ற புகாரைக் குறிப்பிடும் வகையில் சட்டையில் பேட்ஜ் அணிந்து வந்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs