மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்...
அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.
தூத்துக்குடி துறைமுக வளாகப் பகுதியில் மத்திய அரசின் என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் சுமாா் 1,350 ஒப்பந்த ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு, நெய்வேலி என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு வழங்குவதைப்போல ஊதிய உயா்வு அளிக்க சென்னை உயா்நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிா்த்து நிா்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.
இதுதொடா்பான பேச்சுவாா்த்தை நெய்வேலி என்எல்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியா்கள் 1,300 போ் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா்.
இப்போராட்டத்திற்கு, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு என்டிபிஎல் அனல் மின்நிலைய செயலா் அப்பாதுரை, தொழிலாளா் முன்னேற்ற சங்க அமைப்புச் செயலா் அன்பழகன், என்டிபிஎல் ஒப்பந்த தொழிலாளா் சங்கம் தொமுச செயலா் முத்துராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டம் காரணமாக அனல் மின்நிலைய உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், இப் பிரச்னையில் அரசு தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் என தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.