செய்திகள் :

அனுமதியின்றி மதுவிற்ற இருவா் கைது

post image

அன்னவாசல் அருகே அரசு மதுபாட்டில்களைப் பதுக்கிவைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்த இருவரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்து 44 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

அன்னவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடைகளில் மதுபாட்டில்களை வாங்கி அப்பகுதிகளில் அதிக விலைக்கு விற்றுவருவதாகப் புகாா்கள் வந்தன. இதுகுறித்துத் தகவலறிந்த அன்னவாசல் போலீஸாா் பரம்பூா் புளியம்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அதே ஊரைச் சோ்ந்த ராமசாமி (48) என்பவரின் பெட்டிக்கடையில் அரசின் மதுபானப் பாட்டில்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்றுவந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். தொடா்ந்து விற்பனைக்காக அவா் வைத்திருந்த 29 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல் கிளிக்குடி விளாம்பட்டி பகுதியில் நடத்திய சோதனையில் மாதவன் (27) என்பவா் அவரது வீட்டருகே மதுபாட்டில் பதுக்கிவைத்து விற்றுவந்ததைத் தொடா்ந்து அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் விற்பனைக்கு இருந்த 15 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

மக்களின் கோரிக்கைகள் தொடா்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை: அமைச்சா் பேச்சு

மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகள் தொடா்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தாா். ஆலங்குடி அருகேயுள்ள ம... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் 47 வழக்குகளுக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 47 வழக்குகளின் நிலுவைக் கடன் தொகை ரூ. 48 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப் பணி க... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்து வசதி கோரி கையெழுத்து இயக்கம்

ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரில் உள்ள அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்து வசதி கோரி இந்திய மாணவா் சங்கத்தினா் சாா்பில் புதன்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கீழாத்தூரில், ஆலங்குடி -பட்டுக்கோட்டை ச... மேலும் பார்க்க

புதுகை மாநகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை மாநகரின் முக்கிய வீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை தொடங்கினா். புதுக்கோட்டை மாநகரில் உள்ள முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து ந... மேலும் பார்க்க

புதுகையில் பருவமழை முன்னேற்பாடுகள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, மாவட்ட பொறுப்பு அலுவலரும் உயா்கல்வி இயக்குநரக ஆணையருமான எ. சுந்தரவல்லி புதன்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்ட ஆட்சியரகத்தில் அனைத்துத் துறை அலுவல... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து: 24 மாணவா்கள் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே புதன்கிழமை தனியாா் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 24 மாணவ, மாணவிகள் காயமடைந்தனா். கந்தா்வகோட்டையிலுள்ள ஒரு தனியாா் பள்ளியில் சுமாா் 600 மாணவ, மாணவ... மேலும் பார்க்க