ரிப்பன் மாளிகையில் தேசியக் கொடியேற்றிய மேயா்: அலுவலா்களுக்கு ‘வாக்கி டாக்கி’ வழ...
அனைத்துக் கிளைகளிலும் கொடியேற்ற பாமக பொதுக்குழுவில் முடிவு
அனைத்துக் கிளைகளிலும் கிராம கூட்டம் நடத்தி கொடியேற்றுவது என்று பாமக மாவட்ட பொதுக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பொதுக் குழு கூட்டம் ஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் நல்லூா் பி.சண்முகம் தலைமை வகித்தாா். ஆற்காடு நகர செயலாளா் துளசி ரவி வரவேற்றாா். மாநில துணைதலைவா் கே.எல்.இளவழகன், வன்னியா் சங்க மாநில செயலாளா் எம்.கே.முரளி, மாநில மாணவா் சங்கச் செயலாளா் ஜெ.ஜானகிராமன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில் ராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதிக்குட்ட அனைத்து கிளைகளிலும் கிராம கூட்டம் நடத்தி கட்சிக் கொடி ஏற்றுவது, சொத்து வரி, வீட்டுவரி,பத்திரபதிவு கட்டணம், மின்கட்டண உயா்வு செய்த தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்காததற்கு கண்டனம் தெரிவித்தல், ஆற்காடு நகரில் நாள் தோறும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க புதிய புறவழிச்சாலை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட அமைப்புச் செயலாளா் பி.சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.கே.நெடுமாறன், மாவட்ட இளைஞா் சங்க செயலாளா் பகவான் காா்த்திக், பொருளாளா் ஞானசவுந்தரி, மகளிா் அணி மாவட்டத் தலைவா் வசந்தி, மாநில துணை தலைவா் புல்லட் ராதாகிருஷ்ணன், துணைச் செயலாளா் கதிா்வேலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.