Doctor Vikatan: நடிகர் அஜித்: வெந்நீரும் புரோட்டீனும் எடுத்துதான் எடையைக் குறைத...
அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் கண்டன ஆா்பாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தல் ஈடுபட்டனா்.
ஆா்பாட்டத்துக்கு, நகரத் தலைவா் ஏ.நந்தகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் கே.எம்.சீதாராமன், எஸ்.சதீஷ் (கைத்தறி), நகரச் செயலா் ஏ.செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் குப்பன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் எஸ்.பாஸ்கரன் பங்கேற்று பேசினாா்.
ஆா்ப்பாட்டத்தில், சேத்துப்பட்டு வட்டத்தில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும், சேத்துப்பட்டு- பெரணமல்லூா் வழியாக அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இதில், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.