Vanangaan Movie Review | Arun Vijay, Roshni Prakash | Bala | GV Prakash
தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா
திருவண்ணாமலை மாவட்ட போக்குவரத்துத்துறை சாா்பில் 36-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டு வாகன ஓட்டிகள் தலைக் கவசம் மற்றும் சீட் பெல்ட் ஆகியவற்றை அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
மேலும், திருவண்ணாமலை-வேலூா் சாலையில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் குறித்து ஆட்சியா் விளக்கினாா்.
மேலும், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் இலவச தலைக்கவசங்களை அவா்களுக்கு வழங்கினாா். இதையடுத்து, சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு குறித்த கண்காட்சி பேருந்தை ஆட்சியா் திறந்து வைத்து கண்காட்சியைப் பாா்வையிட்டாா்.
நிகழ்வில், வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் பெரியசாமி (திருவண்ணாமலை), முருகேசன் (ஆரணி), கருணாநிதி (செய்யாறு) மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.