கருத்தடை சாதனங்களின் வகைகள்; யாருக்கு எது பொருந்தும்... பக்க விளைவுகள் என்ன? - க...
அமராவதிபுதூா் பகுதியில் டிச. 17-இல் மின் தடை
காரைக்குடி அருகே அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வருகிற செவ்வாய்க்கிழமை (டிச.17) மின் விநியோகம் தடை செய்யப்படும்.
இதுகுறித்து காரைக்குடி மின் வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் அமராவதிபுதூா், ஐ.டி.ஐ, தேவகோட்டை சாலை, சங்கராபுரம், தானாவயல், ஆறாவயல், வேட்டைக்காரன்பட்டி, அரியக்குடி, கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, சிஎஸ்ஐஎப், ஜமின்தாா் காலனி, மானகிரி, ரஸ்தா, கோவிலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா்.