Jemimah: ’ஒவ்வொரு இரவும் அழுதிருக்கிறேன்; கடவுள்தான் இதை நிகழ்த்தினார்!'- ஆனந்த ...
அமெரிக்காவில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு மீண்டும் மீண்டும் செக் வைக்கும் ட்ரம்ப்
அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினருக்கு மீண்டும் செக் வைத்துள்ளது ட்ரம்ப் அரசாங்கம்.
என்ன அது?
இதுவரை அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர் தங்களை தொடர்ந்து பணிபுரியும் அனுமதிக்க விண்ணப்பித்தால் போதும். தானாகவே அவர்களுக்கு பணிபுரிவதற்கான அனுமதி புதுப்பிக்கப்பட்டு தரப்படும்.
ஆனால், இனி அப்படி கிடையாது. தொடர்ந்து பணிபுரிவதற்காக விண்ணப்பித்திருப்பவர்களை இனி தேசிய பாதுகாப்பு அடிப்படையில் சோதிக்கப்படுவார்கள். அதில் தேர்வானால் மட்டுமே, அவர்களது பணி புரிவதற்கான அனுமதி நீட்டிக்கப்படும்.
இந்த நடைமுறை இன்று (அமெரிக்க நேரப்படி) முதல் அமலாகிறது. அக்டோபர் 30-க்கு முன்பு, விண்ணப்பித்து, அனுமதி பெற்றவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

முன்பு
அமெரிக்காவில் முன்பிருந்த ஆட்சியில், வேலைக்கான அனுமதி முடிந்த பின்னும், அந்த வேலை நீட்டிப்புக்கான சரியான நேரத்தில் விண்ணப்பித்திருந்தால், அடுத்த 540 நாள்களுக்கு தானாக அனுமதி நீட்டிக்கப்படும். இதற்கு தான் தற்போது தடை விதித்துள்ளது அமெரிக்க அரசு.
இதனால், பல வெளிநாட்டினர் பாதிக்கப்பட்டாலும், குறிப்பாக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஏற்கெனவே ஹெச்-1பி விசா கட்டண உயர்வு விஷயம் இந்தியர்களை பெரிதாக பாதித்த நிலையில், இந்த நகர்வும் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பெரிய அடி.


















