செய்திகள் :

அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர்! இருநாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை!

post image

அமெரிக்கா மற்றும் சீனா இடையில் வர்த்தகப் போர் நடைபெற்று வரும்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்ற பிறகு, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடையே வரிவிதிப்புகளை மேற்கொண்டார். சீனா மீது 34 சதவிகித வரியை விதித்தார்.

இதனையடுத்து, அமெரிக்கா மீது சீனாவும் வரியை விதித்தது. இந்த வரிப்போரானது, சீனா மீது அமெரிக்கா 145 சதவிதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவிகித வரியும் உயர்த்தும் அளவுக்கு கொண்டு சென்றது. இதனால், உலகளவிய பங்குச்சந்தைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

இறுதியாக, இரு நாடுகளும் 90 நாள்களுக்கு வரி விதிப்பை ஒத்திவைப்பதாக பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டன.

இருப்பினும், ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக, அவ்விரு நாடுகளும் குற்றஞ்சாட்டிக் கொண்டன. இதனிடையே, சீன அதிபர் ஸி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இதுகுறித்து, புதன்கிழமையில் டிரம்ப் கூறுகையில், சீன அதிபர் ஸி ஜின்பிங்கை எப்போதுமே பிடிக்கும்; அது எப்போதும் தொடரும். இருப்பினும், அவர் மிகவும் கடினமானவர்; அதிலும், அவருடன் ஒப்பந்தம் மேற்கொள்வது என்பது மிக மிகக் கடினமானது என்று தெரிவித்திருந்தார்.

இருவரும் வியாழக்கிழமையில் மேற்கொண்ட பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை.

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்!

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது. நீண்ட கால நட்பு: டொனால்ட் டிரம... மேலும் பார்க்க

ஹாங்காங் - ஜோஷுவா மீது புதிய வழக்கு!

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, அதிகா... மேலும் பார்க்க

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! - இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங... மேலும் பார்க்க

நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. அந்த நாட்டு ராணுவத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தத் தொண்டு அமைப்பு கூறியது. இரண்டு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க