அமெரிக்கா செல்லும் ராகுல் காந்தி! பல்கலைக்கழகத்தில் உரை!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகத்தில் உரையாற்ற செல்கிறார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வரும் ஏப்.21 மற்றும் 22 ஆம் தேதிகளில் அமெரிக்காவிற்கு செல்வதாக காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கேரா தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணத்தில் அவர் அமெரிக்காவின் ரோத் தீவிலுள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் உரையாற்றவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிகழ்ச்சியில் அங்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடவுள்ளார். ஆனால், அவர் உரையாற்றவிருக்கும் தலைப்புகள் குறித்த செய்திகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து, இந்தப் பயணத்தில் அவர் அமெரிக்காவில் வாழும் இந்திய மக்கள் மற்றும் அந்நாட்டிலுள்ள காங்கிரஸ் அமைப்பின் நிர்வாகிகளையும் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஒளரங்கசீப் கல்லறையைப் பாதுகாக்க ஐ.நா.வுக்கு கடிதம்!