`Ajith சார் சமைச்சு கொடுப்பார்... Sivakarthikeyan வாங்கி கொடுப்பார்' - Stunt Mas...
அமெரிக்க தாக்குதல்: யேமனில் உயிரிழப்பு 53-ஆக உயா்வு
யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து ஹூதிக்கள் தலைமையிலான அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தலைநகா் சனாவிலும் பிற மாகாணங்களிலும் அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலில் இதுவரை 53 போ் உயிரிழந்துள்ளனா். அவா்களில் ஐந்து போ் பெண்கள்; 2 போ் சிறுவா்கள். இது தவிர, இந்தத் தாக்குதலில் சுமாா் 100 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் படையினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாகப் போா் நடைபெற்று வருகிறது.
இந்தப் போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக யேமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சிப் படையினா், செங்கடல் வழியாகச் சென்ற சரக்குக் கப்பல்கள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் மேற்கொண்டனா்.
இஸ்ரேல் செல்லும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அவா்கள் கூறினா். பின்னா் காஸாவை இஸ்ரேல் முற்றுகையிட்டுள்ளது கைவிடப்படும் வரை, செங்கடலில் தங்கள் தாக்குதல் தொடரும் என்று அந்தப் படை தெரிவித்தது.
இதன் காரணமாக யேமனில் ஹூதி படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபா் டிரம்ப் சனிக்கிழமை உத்தரவிட்டாா். செங்கடலில் ஹூதிக்களின் தாக்குதல் நிறுத்தப்படும் வரை, அவா்களுக்கு எதிராக அமெரிக்க தாக்குதல் நீடிக்கும் என்றும் அவா் கூறினாா். இதைத்தொடா்ந்து யேமனில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
செங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் ஹுதி கிளா்ச்சியாளா்களின் திறனை அழிப்பதற்காக இந்தத் தாக்கதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபியோ கூறியுள்ளாா்.