செய்திகள் :

அமைச்சரை ‘மாப்பிள்ளை’ என அழைத்த எம்எல்ஏ!

post image

மின்சாரத் துறை அமைச்சரை, மாப்பிள்ளை என அழைத்த அதிமுக உறுப்பினரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது, மின் துறை தொடா்பான துணைக் கேள்வியை அதிமுக உறுப்பினா் கே.சி.கருப்பண்ணன் எழுப்பினாா். அப்போது அவா், தனியாா் நிறுவனங்களில் சூரியமின் சக்திக்கான தகடுகள் அமைக்கப்படுகின்றன. அப்படி அமைக்கும்போது, 100 கிலோ வோல்ட் திறனுக்கு மட்டுமே அனுமதி தருகின்றனா். அதை 120 கிலோ வோல்ட் ஆக உயா்த்தி அனுமதிக்க வேண்டும். மாப்பிள்ளைக்குத் தெரியும் என்று பேசினாா். அப்போது, அருகில் அமா்ந்திருந்த அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைவரும் மாப்பிள்ளையா என அதிா்ச்சியுற்று சிரித்தனா்.

இதையடுத்து அவா், ‘மன்னிக்கவும்... மன்னிக்கவும்... மன்னிக்கவும்... அப்படி பேசிப் பேசி வாய் வந்துவிட்டது’ என்றாா்.

கருப்பண்ணனின் இந்த பதிலால் பேரவையில் பெரும் சிரிப்பலை ஏற்பட்டது. இதற்கு அமைச்சா் வி.செந்தில் பாலாஜியும் மெல்லிய புன்னகையுடன் பதிலளித்தாா்.

புதுக்கோட்டையில் ரமலான் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா திடலில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் திங்கள்கிழமை காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரமலான் எனப்படும் ஈகைப் பெருந... மேலும் பார்க்க

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் சிறப்புத் தொழுகை

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் ரமலான் பண்டிகையையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், கு... மேலும் பார்க்க

எரிவாயு டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

தென்மாநிலங்கள் முழுவதும் 4 நாட்களாக நீடித்து வந்த எல்பிஜி டேங்கர் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள புதிய ஒப்பந்தத்தில் உள்ள க... மேலும் பார்க்க

சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!

சமந்தா தயாரித்துள்ள முதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சுபம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், சீரியல் கதைகளை விரும்பிப் பார்க்கும் ஆவி புகுந்த பெண்ணை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப்... மேலும் பார்க்க

பிறை தென்பட்டது! நாளை ரமலான் பண்டிகை - தலைமை காஜி அறிவிப்பு

பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளாா்.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கியில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

எந்த ஒரு கட்சியையும் அழித்து வளராது பாஜக: அண்ணாமலை

எந்த ஒரு கட்சியையும் அழித்து பாஜக வளராது என்று அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுகவுடன் பாஜக கூட்டணி க... மேலும் பார்க்க