செய்திகள் :

``அமைச்சர் சேகர் பாபு சொன்ன மாதிரி..." - திமுக விழாவில் விஜய் ஆண்டனி

post image

நேற்று நடந்த 'முதல்வரின் கலைக்களம் - மக்கள் முதல்வரின் மனிதநேய விழா' என்ற திமுக நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, "இது மக்கள் முதல்வரின் மனிதநேய விழா. ரொம்ப சந்தோஷமா இருக்கு. சங்கமம் என்ற நிகழ்ச்சி மூலம் பல கலைகளை ஊக்குவிச்சாங்க. இப்போ முதல்வரின் பிறந்தநாளையொட்டி மீண்டும் இந்த விழா நடத்தப்படுது.

அமைச்சர் சேகர்பாபு உடன் விஜய் ஆண்டனி

சினிமா வந்தப்பிறகு நாட்டுப்புற கலை உள்ளிட்ட பல கலைகள் அழிஞ்சுட்டு வருது. ஆனா, அது இன்னமும் வாழுது என்பதைக் காட்ட பல திறமையான கலைஞர்களை அழைத்து இந்த விழா நடந்துகிட்டு இருக்கு. அந்தக் கலைஞர்களுக்கு தான் இது எவ்வளவு பெரிய ஊக்குவிப்புன்னு தெரியும். இந்த விழா அவங்களுக்கு பெரிய நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் கொடுக்கும்.

இப்படி எனக்கு ஸ்கூல், காலேஜ்ல கிடைச்ச ஊக்குவிப்புனால தான், இப்போ நான் இசையமைப்பாளரா ஆகியிருக்கேன். இந்த நிகழ்ச்சிகளை நடத்தும் முதல்வருக்கு நன்றி. சேகர்பாபு சார் சொன்ன மாதிரி நீங்க (முதல்வர்) 100 வருசம் நல்லா வாழணும். இந்த நிகழ்ச்சிக்கு என்னை கூப்பிட்டதில் மகிழ்ச்சி" என்று பேசியுள்ளார்.

Ilaiyaraaja: `கடவுளா... 'இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிட்டீங்களே'’ - சென்னை திரும்பிய இளையராஜா

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துவிட்டு, தற்போது சென்னை திரும்பியுள்ளார் இளையராஜா. அவரை தமிழ்நாடு அரசு சார்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.சிம்பொனி அரங்கேற்றம் குறித்து சென்னை விமான நில... மேலும் பார்க்க

``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- டெலிபோன் ராஜ் பேட்டி

`சுழல்' வெப் சீரிஸின் முதலாவது சீசனின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.Suzhal 2 ReviewSuzhal 2 Review: நாட்டார் தெய்வங்களின் கனெக்ட் ஓகே; ஆ... மேலும் பார்க்க

Rajinikanth: கள்ளழகர் கோயில், 18-ஆம் படி கருப்பணசுவாமி - ரஜினி மகளின் ஆன்மிகப் பயணம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, அவரின் கணவர் விசாகனும் பல்வேறு வேண்டுதல்களுடன் முக்கிய கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். சௌந்தர்யா-விசாகன்அந்த வகையில் தென் மாவட்ட கோயில்களில் சிறப்பு... மேலும் பார்க்க

Vijay: `ஜனநாயகன் விஜய் எப்படி?!' - விருது விழாவில் பாபி தியோல்

`கங்குவா' திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் விஜய்யுடன் `ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார் பாலிவுட் நடிகர் பாபி தியோல். `கங்குவா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இந்த பாலிவுட் நடிகர் `ஜன நாயகன்' படத்... மேலும் பார்க்க

Sangeetha: `25 வருட இடைவெளிக்குப் பிறகு' - கம்பேக் கொடுக்கும் `பூவே உனக்காக' சங்கீதா

25 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார் நடிகை சங்கீதா.தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக வலம் வந்த நேரத்திலேயே `பூவே உனக்காக' சங்கீதா தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு சினிமாவிலிருந்... மேலும் பார்க்க