செய்திகள் :

அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

post image

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் 3 நாள்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.

அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமச்சந்திரன் மற்றும் மகன் அருண் நேரு பங்குதாரர்களாக உள்ள கட்டுமான நிறுவனத்தில் நடைபெற்ற பணப்பரிவர்த்தனைகள் தொடர்பாக அமலாக்கத்துறையினர் கடந்த 7 ஆம் தேதி சோதனையைத் தொடங்கினர்.

சென்னை, திருச்சியில் அமைச்சர் நேரு, அவரது சகோதரர் ராமச்சந்திரன், மகன் அருண் நேரு உள்ளிட்டோருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

இதில், ராமச்சந்திரனை மட்டும் அழைத்துச் சென்ற அமலாக்கத்துறையினர் அவரிடம் 5 மணிநேரத்துக்கு மேலாக செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர்.

அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் சோதனையில் அமலாக்கத்துறையினர் ஈடுபட்ட நிலையில், நேற்று மாலையும் ராமச்சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், 72 மணிநேரத்துக்கு மேலாக நடைபெற்ற சோதனையில் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த ஆவணங்களின் அடிப்படையில் ராமச்சந்திரனிடம் தொடர் விசாரணையில் ஈடுபட அமலாக்கத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிக்க : நிகழாண்டு இறுதிக்குள் அமெரிக்காவுடன் வா்த்தக ஒப்பந்தம்: எஸ்.ஜெய்சங்கா்

ஏப். 23-ல் அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் விருந்து!

சென்னையில் ஏப். 23 ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அ... மேலும் பார்க்க

தொழிற்துறைக்கான 5 அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின்!

சென்னை குன்றத்தூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்க 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.சென்னையை அடுத்த குன்றத்தூரில் இன்று கல... மேலும் பார்க்க

மதுபோதையில் கார் ஓட்டி விபத்து: நடிகர் பாபி சிம்ஹாவின் ஓட்டுநர் கைது!

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் மூவர் காயமடைந்தனர். திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர், சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் மதுபோதையி... மேலும் பார்க்க

தொலைக்காட்சி பார்த்துதான் துரை வைகோ முடிவை அறிகிறேன்: வைகோ

மதிமுக பொதுச் செயலர் பதவியிலிருந்து துரை வைகோ விலகுவதாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பை, தொலைக்காட்சி வாயிலாகத்தான் அறிகிறேன் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணி வலுவாகவே உள்ளது: எல்.முருகன்

நாமக்கல்: அதிமுக - பாஜக கூட்டணி வலுவாக உள்ளது, எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.நாமக்... மேலும் பார்க்க

குமரி கண்ணாடி பாலத்தில் மீண்டும் மக்களுக்கு அனுமதி!

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்குச்... மேலும் பார்க்க