'கலெக்டர், எஸ்.பி. நான் சொல்றததான் கேட்கணும்' - தருமபுரி திமுக மாவட்டப் பொறுப்பா...
அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதி!
உடல் நலக் குறைவு காரணமாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
மாநில வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் துறை சாா்ந்த அலுவல்கள், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தாா்.
இந்த நிலையில், அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு மருத்துவக் குழுவினா் தொடா்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனா். தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.