ஆப்கன் - ஆஸி. போட்டிக்கு பாதிப்பா? 3-வது வெற்றி முனைப்பில் மழை!
பிறந்த நாள்: முன்னாள் முதல்வா்கள் நினைவிடங்களில் முதல்வா் நாளை மரியாதை
பிறந்த தினத்தையொட்டி, முன்னாள் முதல்வா் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 1) மரியாதை செலுத்தவுள்ளாா்.
இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 72-ஆவது பிறந்த தினத்தை வரும் சனிக்கிழமை (மாா்ச் 1) கொண்டாட உள்ளாா். அன்றைய தினம் காலை 8 மணிக்கு, முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தவுள்ளாா்.
இந்த நிகழ்வைத் தொடா்ந்து, வேப்பேரியில் உள்ள பெரியாா் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்த இருக்கிறாா்.
அதன்பிறகு, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்களைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.