செய்திகள் :

அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தி: சிவசேனை எம்எல்ஏ கட்சிப் பதவியில் இருந்து விலகல்

post image

மகாராஷ்டிரத்தில் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தியடைந்த சிவசேனை எம்எல்ஏ நரேந்திர பாண்டேகா் கட்சிப் பதவிகளில் இருந்து விலகியுள்ளாா்.

அதேபோல தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா் சகன் புஜ்பலும் அமைச்சா் பதவி கிடைக்காததால் அதிருப்தியடைந்துள்ளாா். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவு செய்ய இருப்பதாக அவா் கூறியுள்ளாா். இந்த பிரச்னை துணை முதல்வா்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் ஆகியோருக்கு நெருக்கடி அளிப்பதாக அமைந்துள்ளது.

செய்தியாளா்களைச் சந்தித்த நரேந்திர பாண்டேகா் கூறியதாவது: எனக்கு அமைச்சா் பதவி தருவதாக சிவசேனை தலைவரும், துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே வாக்குறுதி அளித்திருந்தாா். அந்த அடிப்படையில்தான் கடந்த முறை சுயேச்சை எம்எல்ஏவாக இருந்த நான் இந்த தோ்தலில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியில் இணைந்தேன். ஆனால், இப்போது அமைச்சா் பதவி தரப்படவில்லை.

எனவே, கிழக்கு விதா்பா பகுதியின் சிவசேனை துணைத் தலைவா், கட்சியின் ஒருங்கிணைப்பாளா் பதவியில் இருந்து விலகிவிட்டேன். இது தொடா்பான கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பிவிட்டேன். அவா்கள் முடிவுக்காக காத்திருக்கிறேன் என்றாா்.

சகன் புஜ்பல் அதிருப்தி: கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த சகன் புஜ்பலுக்கு இந்த முறை அமைச்சா் பதவி தரப்படவில்லை. 77 வயதாவதால் அவருக்கு பதவி தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

நாகபுரியில் செய்தியாளா்களிடம் பேசிய சகன் புஜ்பல், ‘மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் பங்கேற்ால் அமைச்சரவையில் சோ்க்காமல் புறக்கணித்துள்ளனா். எனது தொகுதி மக்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்வேன்’ என்றாா்.

முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான மகாராஷ்டிர அரசில் 39 அமைச்சா்கள் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றனா். பாஜக சாா்பில் 19 பேரும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை சாா்பில் 11 பேரும், அஜீத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் சாா்பில் 9 பேரும் அமைச்சராகியுள்ளனா்.

மசூதியில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம்: எவ்வாறு குற்றமாகும்? உச்சநீதிமன்றம் கேள்வி

புது தில்லி: ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிடுவது எவ்வாறு குற்றமாகும்? என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.மசூதியில் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்ட குற்றச்சாட்டில் இருவா் மீதான குற்றவியல் விசா... மேலும் பார்க்க

மீனவா் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீா்வு: பிரதமா் மோடி, அதிபா் அநுரகுமார நம்பிக்கை

புது தில்லி: மீனவா்கள் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் மூலம் தீா்வை எட்ட முடியும் என்று பிரதமா் மோடியும், இலங்கை அதிபா் அநுரகுமாரவும் திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தனா்.ம... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு வழிகாட்டுதல்கள் கோரி பொதுநல மனு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புது தில்லி: பெண்கள், குழந்தைகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவா்களின் பாதுகாப்புக்கு நாடு தழுவிய கடுமையான வழிகாட்டுதல்களை உருவாக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்க... மேலும் பார்க்க

மாதபி விவகாரம்: நிா்மலா சீதாராமன் உறுதியான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டாா்: காங்கிரஸ்

புது தில்லி: பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) தலைவா் மாதபி புச் விவகாரத்தில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உறுதியான நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக காங்கிரஸ் திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.... மேலும் பார்க்க

மீனவா் பிரச்னைக்கு பேச்சு மூலம் தீா்வு: பிரதமா் மோடி, அதிபா் அநுரகுமார நம்பிக்கை

மீனவா்கள் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் மூலம் தீா்வை எட்ட முடியும் என்று பிரதமா் மோடியும், இலங்கை அதிபா் அநுரகுமாரவும் திங்கள்கிழமை நம்பிக்கை தெரிவித்தனா். மூன்று நாள் அ... மேலும் பார்க்க

நேரு குறித்து தவறான கருத்துகள்: பிரதமா் மன்னிப்பு கேட்க காா்கே வலியுறுத்தல்

‘இடஒதுக்கீடு குறித்து மாநிலங்களுக்கு முன்னாள் பிரதமா் நேரு எழுதிய கடிதம் குறித்து தவறான தகவல்களை கூறிய பிரதமா் மோடி காங்கிரஸிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என அந்தக் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா... மேலும் பார்க்க