செய்திகள் :

அம்பேத்கர் இல்லாவிட்டால் மோடி டீதான் விற்றுக் கொண்டிருந்திருப்பார்! சித்தராமையா

post image

அம்பேத்கர் பிறக்காவிட்டிருந்தால் பிரதமர் மோடி இன்னும் டீ தான் விற்றுக் கொண்டிருந்திருப்பார் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி 2 நாள் விவாதத்தின் முடிவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும்’ என்றார்.

அமித் ஷாவின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்ததுடன், உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து அமித் ஷா விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க : 'சிலருக்கு அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம்' - அமித் ஷாவுக்கு விஜய் கண்டனம்!

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவிட்டதாவது:

“அம்பேத்கர் குறித்து பாஜகவின் கருத்தை வெளிப்படையாக பேசியதற்கு உங்களை வாழ்த்துகிறேன். உங்களின் நேற்றைய பேச்சு எங்களை ஆச்சரியப்படுத்தவில்லை. உங்கள் கட்சியின் உண்மையான மனநிலை எங்களுக்கு முன்னதாகவே தெரியும். அரசியல் சட்டத்தின் சிற்பிக்கு நீங்கள் அளித்த மரியாதையை தற்போது நாடே பார்த்துள்ளது. அவரது அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இயங்கும் நாடாளுமன்றத்திலேயே நின்று, வெட்கமற்ற செயலை செய்ததற்கு வாழ்த்துகள்.

அம்பேத்கர் மீது அளவற்ற மரியாதை எனக்கு உண்டு, எனது வார்த்தைகள் திரிக்கப்பட்டன என்று கூறி நாட்டை தவறாக வழிநடத்த முயற்சிக்காதீர்கள். நாங்கள் ஏமாளிகள் அல்ல, உங்கள் வார்த்தைகளுக்கு பொறுப்பேற்று நாட்டு மக்களை எதிர்கொள்ளுங்கள்.

எங்களுக்கு அம்பேத்கர் ஃபேஷன் அல்ல உத்வேகம். நாங்கள் சுவாசிக்கும் வரை பூமியில் சூரியனும் சந்திரமும் இருக்கும் வரை அம்பேத்கரின் மரபு நிலைத்திருக்கும். அவரை நிராகரிக்க நீங்கள் எவ்வளவு முயல்கிறீர்களோ அவ்வளவு வலிமையாக முன்னோக்கிச் செல்லும். உங்கள் அகந்தையைக் கண்டு துரோகிகள் கைதட்டியிருக்கலாம், ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், அம்பேத்கரின் சமத்துவமும் கண்ணியமும் பெற்ற தேசத்தில் உள்ள கோடிக்கணக்கானோர் உங்களை கண்டிக்கிறார்கள்.

அம்பேத்கர் பிறக்காமல் இருந்திருந்தால், இன்று முதல்வராகியிருக்க மாட்டேன், எனது கிராமத்தில் மாடு மேய்துக் கொண்டிருந்திருக்கலாம். மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் தலைவராகி இருக்க மாட்டார்.

நாங்கள் மட்டுமல்ல, அம்பேத்கரின் பங்களிப்பு இல்லாமல் நீங்களும் உள்துறை அமைச்சராக இருக்க முடியாது. உங்கள் நண்பரும் பிரதமருமான நரேந்திர மோடி, இன்னும் ரயில் நிலையத்தில் டீ விற்றுக் கொண்டிருந்திருப்பார். அம்பேத்கரின் பார்வைதான் அனைவரையும் உயர்த்தியது.

அம்பேத்கர் மீதான உங்கள் வெறுப்பு, வரலாறு அறிந்தவர்களுக்கு புதிதல்ல. உங்கள் கருத்தியல் பெற்றோரான ஆர்எஸ்எஸ், அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் அவர் எழுதிய அரசியலமைப்பை நிராகரித்தது ஏன்? ஹெட்கேவார், கோல்வால்கர், சாவர்க்கர் போன்ற ஆர்எஸ்எஸ் தலைவர்களின் அரசியல் சாசனத்திற்கு எதிரான அறிக்கைகளை வரலாற்று பதிவுகள் ஆவணப்படுத்துகின்றன. இந்த உண்மைகளை நீங்கள் மறைக்க முயற்சி செய்யலாம், ஆனால் அவற்றை அழிக்க முடியாது. நாடாளுமன்றத்தில் உங்கள் கருத்துக்கள் நீண்ட கால ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் நீட்சியே.

உங்களை போன்றே பதிலளிக்கிறேன். உங்கள் கட்சியும், அதன் சித்தாந்த குடும்பமும் மோடி... மோடி... மோடி என்று கோஷம் போடும் ஃபேஷனை உருவாக்கி விட்டன. நீங்கள் மோடியின் பெயரை உச்சரித்ததற்கு பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் ஒரு இடத்தைப் பெற்றிருக்கலாம். ஏழு வாழ்நாள்களுக்கு மட்டுமல்ல, நூறு வாழ்நாள்களுக்கு. உங்கள் அதிகாரத்தின் மீது ஒட்டிக் கொண்டிருந்த பாவங்கள்கூட மன்னிக்கப்பட்டிருக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தலைக்கவசம் அணியாமல் செல்லும் அரசு அதிகாரிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து! எங்கே?

புதுச்சேரியில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் அரசு அதிகாரிகளுக்கு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.புதுச்சேரியில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் புதிய உத்தரவு அமலுக்கு வ... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தேர்தல்: நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் 31 உறுப்பினர்கள்!

நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் மக்களவையில் இருந்து 21 பேரும், மாநிலங்களவையில் இருந்து 10 பேரும் இடம்பெற்றுள்ளனர். ப... மேலும் பார்க்க

மும்பை படகு விபத்து: கடற்படை படகு மோதியதே காரணம்!

மும்பையில் 100-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதற்கு கடற்படையின் படகு மோதியதே காரணம் என்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய கடற்படை செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க

அம்பேத்கரை அவமதிப்பது பாஜகவின் ஆணவத்தைக் காட்டுகிறது!

அம்பேத்கர் குறித்த சர்ச்சைப் பேச்சு பாரதிய ஜனதாவின் ஆணவத்தைக் காட்டுவதாக சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்... மேலும் பார்க்க

கர்நாடகம்: வாகனங்கள் நேருக்குநேர் மோதியதில் நால்வர் பலி!

கர்நாடகத்தில் வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் நால்வர் பலியாகினர்.கர்நாடகத்தில் குடிபள்ளி கிராமத்தில் இரண்டு மோட்டார் பைக்குகள் மீது வெற்று தக்காளிப் பெட்டிகளை ஏற்றிச் சென்ற மினிலாரி நேருக்குநேர... மேலும் பார்க்க

அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்: கார்கே

அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையாகவே அம்பேத்கர் மீ... மேலும் பார்க்க