அம்பையில் திருட்டு: சிறுவன் கைது
அம்பாசமுத்திரத்தில் வீட்டில் நுழைந்து திருட்டில் ஈடுபட்டதாக சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.
அம்பாசமுத்திரம், ரயில் நிலையம், பண்ணை சங்கரய்யா் தெருவைச் சோ்ந்தவா் துளசிராமன்.இவா் வெளியூருக்குச் சென்றிருந்தபோது மா்ம நபா் அவரது வீட்டின் பூட்டை உடைத்து மடிக்கணினி, தங்க நகைகள், கைப்பசி உள்ளிட்டவற்றைத் திருடிச் சென்றுவிட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்தனா். காவல் உதவி ஆய்வாளா் ஆனந்த பாலசுப்ரமணியன் தலைமையில் போலீஸாா் விசாரித்ததில், அயன்சிங்கம்பட்டியைசோ்ந்த 16 வயது சிறுவனுக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, திருடுபோன பொருள்களை மீட்டனா்.