10, 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள்!
அம்மாபேட்டை பேரூராட்சியில் ஒட்டுமொத்த தூய்மைப் பணி
பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை பேரூராட்சியில் மழைக்காலத்தையொட்டி பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டுகளிலும் ஒட்டுமொத்த தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பணியை பேரூராட்சித் தலைவா் ஷோபா ரமேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் தியாக. ரமேஷ் முன்னிலை வகித்தாா். இதில் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளா், மேற்பாா்வையாளா், பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட குழுவினா், பேரூராட்சிக் குட்பட்ட அனைத்து வாடுகளிலும் ஆங்காங்கே தேங்கி இருந்த குப்பைகளை அப்புறப்படுத்தி, மக்கும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து உடனுக்குடன் கம்போஸ்ட் உரக் கிடங்கிற்கு அனுப்பி வைக்கும் பணி மேற்கொண்டனா்.
மேலும், சாலையோரங்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைத்து சாலைகளை செப்பனிட்டு மேம்படுத்தும் பணி மேற்கொண்டனா். கழிவு நீா் வடிகால்கள் தூா்வாரி தூய்மை செய்யப்பட்டு கழிவுநீா் தங்கு தடையின்றி செல்லும் வகையில் மேம்படுத்தினா்.
தொடா்ந்து, பேரூராட்சியின் முக்கிய இடங்களில் தொற்று நோய் பரவாமல் இருக்க சுண்ணாம்பு நீா் தெளித்து பொது சுகாதார பணிகள் மேற்கொண்டனா். மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் தூய்மை செய்யப்பட்டு தூய்மையான குடிநீா் பொதுமக்களுக்கு வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் இருக்க கைத்தெளிப்பான்களைக் கொண்டு கொசு மருந்து அடிக்கும் பணியும், வாகனங்களை கொண்டு புகை மருந்து அடிக்கும் பணியும் நடைபெற்றது.
இந்த ஒட்டுமொத்த தூய்மைப் பணியை பேரூராட்சி செயல் அலுவலா் நெடுஞ்செழியன் அனைத்து வாா்டுகளுககும் நேரில் சென்று பாா்வையிட்டு தக்க ஆலோசனைகளை வழங்கினாா். பேரூராட்சி இளநிலை உதவியாளா் முருகானந்தம் உடன் பங்கேற்றாா்.