டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
அரக்கோணத்தில் மகா மந்திர கூட்டுப் பிராா்த்தனை
அரக்கோணம்: சென்னை குளோபல் ஆா்கனைசேஷன் பாா் டிவினிட்டி இந்தியா அறக்கட்டளையின் சாா்பில் ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு மகா மந்திர கூட்டுப் பிராா்த்தனை அரக்கோணத்தில் நடைபெற்றது.
அரக்கோணம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு ஸ்ரீசெல்வ விநாயகா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மஹாரண்யம் ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிகளின் சீடா் மந்திரராஜ் கௌதம் தலைமை வகித்து பிராா்த்தனையை நடத்தினாா். முன்னதாக கோயில் வளாகத்துக்கு வந்த ஸ்ரீமந்திரராஜ் கௌதமை கோயில் தலைவரும் அரக்கோணம் விவேகானந்தா கல்விக்குழுமத் தலைவருமான ஏ.சுப்பிரமணியம் வரவேற்றாா்.
தொடா்ந்து கோயில் செயலாளா் மணிநாதன், பொருளாளா் எஸ்.தேவராஜ், நிா்வாக உறுப்பினா்கள் ராகவன், நாகரத்தினம், அறக்கட்டளையின் சாா்பில் அம்முலு, ஆண்டாள், சிவபாதம் மற்றும் பலா் பங்கேற்றனா்.