BB Tamil 9: "காசு அள்ளி தந்தாலும் அதை எல்லாம் ஆதரித்துப் பாட மாட்டார்" - கானா வி...
அரசன்: வெளியான சிம்பு - வெற்றிமாறன் காம்போவின் முதல் திரைப்பட டைட்டில்!
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் திரைப்படத்திற்கு 'அரசன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் திரைப்படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இந்தத் திரைப்படம் வட சென்னையைக் களமாகக் கொண்டு உருவாக இருக்கிறது. இது ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படம்.
இந்தத் திரைப்படம் வடசென்னை திரைப்படத்தின் கிளைக்கதையாக இருக்கும் என்றும் வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.
திரைப்படப் பெயர் அறிவிப்பு போஸ்டர் சிம்பு கையில் அரிவாளுடன் இருப்பதுபோல வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை திரைப்படம் பெரியளவில் பேசப்பட்டது, கொண்டாடப்பட்டது. இதனால், இந்தப் திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் மிக அதிகமாக உள்ளது.
மேலும், இது சிம்பு - வெற்றிமாறன் காம்போவில் வெளியாகும் முதல் திரைப்படம் ஆகும்.
இந்தப் திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.