செய்திகள் :

அரசியலமைப்பு மூலம் சமூக நீதியை அடைந்துள்ளோம்: குடியரசுத் தலைவர்

post image

இந்திய அரசியலமைப்பின் மூலம் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான இலக்குகளை நாம் அடைந்துள்ளோம் என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.

நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு அமா்வு இன்று நடைபெற்று வருகின்றது.

இந்நிகழ்வில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பங்கேற்று, அரசமைப்புச் சட்டம் ஏற்பட்டதன் 75-ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

அரசமைப்புச் சட்டத்தின் சம்ஸ்கிருதம், மைதிலி மொழி பதிப்புகள் மற்றும் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்படப்பட்டது. அத்துடன், ‘அரமைப்புச் சட்ட உருவாக்கம்: ஒரு பாா்வை’, ‘அரசமைப்புச் சட்ட உருவாக்கமும் அதன் பெருமைமிகு பயணமும்’ என்ற இரு நூல்களும் வெளியிடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து திரெளபதி முர்மு பேசியதாவது:

நமது அரசியலமைப்பு உயிருள்ள முற்போக்கான ஆவணம். நமது அரசியலமைப்பின் மூலம், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் இலக்குகளை அடைந்துள்ளோம்.

இந்த சிறப்பு அமர்வில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மோடி அரசியலமைப்பைப் படிக்கவில்லை: ராகுல்

பிரதமர் மோடி அரசியலமைப்பைப் படிக்கவில்லை என்று காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். சம்விதன் ரக்ஷக் அபியான் நிகழ்ச்சியில் உரையாற்றிய காந்தி கூறுகையில... மேலும் பார்க்க

அழகுப்படுத்த பல கோடி செலவு: வரலாற்றுச் சிறப்புமிக்க கான்பூர் பாலம் இடிந்து விழுந்தது!

கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், வரலாற்றுச் சிறமிப்புமிக்க பாலம் இன்று இடிந்து கங்கை நதியில் விழுந்தது.150 ஆண்டுகள் பழமையான இந்தப் பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டதால் சில ஆண்டுகளுக்கு ம... மேலும் பார்க்க

சாக்குப்பையில் பெண்ணின் சடலம்: மும்பையில் பரபரப்பு!

மும்பை-புணே விரைவுச்சாலை அருகே சாக்குப்பையில் அடைக்கப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஷிர்கான் பாடா பகுதியைத் தூய்மைத் தொழிலாளர்கள் சாலையைச் சுத்தம் செய்யு... மேலும் பார்க்க

ஒரு மாதத்துக்கும் மேல் டிஜிட்டல் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண்! ரூ.3.8 கோடி மோசடி! மக்களே எச்சரிக்கை!!

மும்பை: டிஜிட்டல் கைது என்று கூறி மோசடியாளர்கள் மக்களை ஏமாற்றுவது குறித்து நாள்தோறும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், 77 வயது பெண்மணியை ஏமாற்றி, ஒரு மாதத்துக்கும் மேல் டிஜிட்டல் காவலில் வைத்து ரூ.3... மேலும் பார்க்க

அமித் ஷா, மோடியின் அடிமைகள் ஷிண்டே, அஜித் பவார்! சஞ்சய் ரெளத்

ஏக்நாத் ஷிண்டேவும் அஜித் பவாரும் அமித் ஷா மற்றும் மோடியின் அடிமைகளாக உள்ளதாக சிவசேனை(உத்தவ் அணி) எம்பி சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை விமர்சித்துள்ளார்.மகாராஷ்டிர முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே ராஜிநாமா... மேலும் பார்க்க

மும்பை 26/11 தாக்குதல்... பலியான வீரர்களுக்கு நினைவஞ்சலி!

மும்பையில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு இன்று தலைவர்களால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதல்மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம... மேலும் பார்க்க