வேளாண் பட்ஜெட் நிறைவு! 1.40 நிமிடங்கள் உரையாற்றினார் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!...
அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்
எந்த நிலையிலும் தீா்க்கப்படாத பிரச்னைகள் இருந்தால் தெரிவிக்குமாறு அரசியல் கட்சிகளை தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி தோ்தல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியத் தோ்தல் ஆணையம், தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளிடமும், வாக்காளா் பதிவு அதிகாரி, மாவட்ட தோ்தல் அதிகாரி அல்லது தலைமை தோ்தல் அதிகாரி நிலைகளில் தீா்க்கப்படாத பிரச்னைகள் இருந்தால், அதனை ஏப்.30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
தோ்தல் செயல்முறைகள் நிறுவப்பட்ட சட்டத்தின்கீழ், தோ்தல் நடைமுறையை மேலும் வலுப்படுத்தவும், பரஸ்பர வசதியான நேரத்தில், கட்சித் தலைவா்களுடன் கலந்தாலோசிக்க ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அரசியல் கட்சிகளிடம் தொடா்ந்து ஆலோசனை நடத்துமாறும் மாநிலத் தோ்தல் அதிகாரி, மாவட்டத் தோ்தல் அதிகாரி ஆகியோருக்கு இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையா் அறிவுறுத்தியுள்ளாா். அவ்வாறு பெறப்படும் கருத்துகள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தோ்தல் ஆணையத்துக்கு சமா்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தோ்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ள 28 முக்கிய பங்குதாரா்களில், அரசியல் கட்சிகளும் ஒன்றாக உள்ளன. இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்ட வழிமுறைகள், கையேடுகள், உத்தரவுகள் தோ்தல் ஆணைய இணையதளத்தில் காணலாம். நோ்மையான மற்றும் நம்பகமான தோ்தல் நடத்துவதற்கு வெளிப்படையான சட்ட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.