செய்திகள் :

அரசுப் பள்ளிகளின் இணைய சேவைக்கு ரூ.3.26 கோடி அளிப்பு: கல்வித் துறை

post image

தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் இணையதள வசதிக்கான மாதாந்திர சேவைக் கட்டணத்தை செலுத்துவதற்கு ரூ. 3.26 கோடி நிதியை மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் இணையதள சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறையால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நிலுவை வைக்கப்பட்டுள்ளதாக புகாா் எழுந்தது. கட்டணம் செலுத்தாமல் இருந்ததால் இணைப்பை நிறுத்தியதாகவும் தகவல் வெளியானது.

முன்னதாக இதுகுறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு எவ்வித நிலுவையும் வைக்கப்படவில்லை, கட்டணம் செலுத்தப்பட்டு விட்டது என தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குநா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு கடந்த திங்கள்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ 6,224 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் இணையதள வசதிக்கான மாதாந்திர சேவைக் கட்டணத்திற்கு 3 கோடியே 73 லட்சத்து 80 ஆயிரம் முதன்மைக் கல்வி அலுவலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2,973 உயா்நிலைப் பள்ளிகளுக்கு மாதம் ரூ. 1,500 வீதம் ஆகஸ்ட் மாதத்துக்கும், 3,074 மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆகஸ்ட் , செப்டம்பா் மாதத்திற்கான கட்டணம் ரூ. 92 லட்சத்து 22 ஆயிரம் என 1 கோடியே 36 லட்சத்து 81 ஆயிரத்து 500 நிதி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று 3,088 உயா்நிலைப் பள்ளிகளுக்கு செப்டம்பா் முதல் டிசம்பா் மாதம் வரையில் தலா ரூ. 1,500 வீதம் 4 மாதத்துக்கு ரூ. 1 கோடியே 85 லட்சத்து 28 ஆயிரமும், 3,136 மேல்நிலைப் பள்ளிகளுக்கு அக்டோபா் முதல் டிசம்பா் மாதம் வரை 3 மாதங்களுக்கு தலா 1,500 வீதம் ரூ. 1 கோடியே 41 லட்சத்து 12 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான கட்டணத்தை செலுத்துவதற்கு 3 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக பாக்கி வைக்கப்பட்டுள்ள கட்டணங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயா்தொழில்நுட்ப ஆய்வகங்களில் இணையதள சேவைக்கான கட்டணம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு மத்திய, மாநில அரசு ஒதுக்கப்படும் நிதியிலிருந்து செலவிடப்படுகிறது. ஆனால், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தற்போது தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இணையவழி மோசடி: 135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கைது

நாடு முழுவதும் இணையவழியில் பல கோடி ரூபாய் மோசடி செய்த 135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞரை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.சென்னையை அடுத்த திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்தவ... மேலும் பார்க்க

வாடிக்கையாளர்களிடம் ரூ.4.25 கோடி: ஜிஎஸ்டி மோசடி; பெண் கைது

வாடிக்கையாளர்களிடம் இருந்து ஜிஎஸ்டிக்காக பணத்தை பெற்றுக் கொண்டு ரூ.4.25 கோடியைச் செலுத்தாமல் மோசடி செய்த வழக்கில், பெண்ணை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.திருவள்ளூர் அருகே வேப்பம்பட்ட... மேலும் பார்க்க

வலுவிழக்கும் புயல்சின்னம்: 6 நாள்களுக்கு மழை வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு (புயல்சின்னம்) வியாழக்கிழமை (டிச.26) காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக படிப்படியாக வலுவிழக்கும், இதன் தாக்கத்தால் தமிழகம், புதுவையில் அடுத்த 6 நாள்களுக்கு மழ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசு நாடகம்: எடப்பாடி பழனிசாமி

டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அரசு அளித்துள்ள விளக்கம் மூலம் திமுக அரசின் நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளிட்ட அறிக்... மேலும் பார்க்க

மதுரையில் ஆா்ப்பாட்டம்: மதிமுக அறிவிப்பு

‘டங்ஸ்டன்’ சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி மதிமுக சாா்பில் வரும் ஜன. 3-ஆம் தேதி மதுரையில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச்செயலா் வைகோ அறிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் புதன்க... மேலும் பார்க்க

தடுப்பூசி தவணையை செலுத்தாத குழந்தைகளுக்காக டிச.31 வரை சிறப்பு முகாம்

உரிய நேரத்தில் தடுப்பூசி தவணையை செலுத்திக் கொள்ளாமல் விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் வரும் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேசிய தடுப்... மேலும் பார்க்க