செய்திகள் :

அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

post image

அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன்.

அந்தப் பணி, இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் நிறைவுபெற்றிருப்பதை அமைச்சர் அன்பில் மகேஸ் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.

நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் மாடல் பள்ளிகள் எனப் பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன்!

அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம்!" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறையினை திறந்துவைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'"அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. அது பெருமையின் அடையாளம்” என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் முதல்வர்.

தொழில்நுட்ப வளர்ச்சியை வகுப்பறைக்குள்ளும் கொண்டு செல்லும் முயற்சியாக, நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில்நுட்பத்துடன் கூடிய கற்றல் சூழலை உருவாக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் பணியை 14.06.2024 அன்று முதல்வர் தொடக்கிவைத்தார்.

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் திறன்மிகு வகுப்பறையினை திறந்துவைத்த அமைச்சர் அன்பில் மகேஸ்.

அதன் தொடர்ச்சியாக இன்று 22,931ஆவது திறன்மிகு வகுப்பறையினை சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நிறுவி மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம்.

அரசு தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 11,76,452 மாணவர்கள் பயனடையும் வகையில், ரூ.455.32 கோடி மதிப்பீட்டில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் நிறுவப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் அறிவியல் புரட்சியை நடத்திக்கொண்டிருக்கும் முதல்வருக்கு மாணவர்கள், ஆசிரியப் பெருமக்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

ஆதவ் அர்ஜுனாவிற்கு தவெகவில் முக்கிய பொறுப்பா?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, தவெக தலைவர் விஜய்யை சந்தித்து பேசிய நிலையில், ஆதவ் அர்ஜுனாவிற்கு தவெகவில் மாநில துணை அல்லது இணை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட இருப்பத... மேலும் பார்க்க

கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்த லாரி: தண்ணீரில் மிதந்த எரிவாயு உருளை!

திருவண்ணாமலை: செய்யாறு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சமையல் எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி வியாழக்கிழமை சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. செங்கல்பட்டு ம... மேலும் பார்க்க

சென்னையில் குத்துச் சண்டை வீரர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் குத்துச் சண்டை வீரர் தனுஷ்(24) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தடுக்கச் சென்ற அவரது நண்பர் படுகாயம் அடைந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை ... மேலும் பார்க்க

பெண்களை காரில் துரத்திய சம்பவம்: காவல் துறை விளக்கம்!

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் பெண்கள் சென்ற காரை, மற்றொரு காரில் இருந்த மர்ம நபர்கள் துரத்திய சம்பவத்தில் தாம்பரம் மாநகரக் காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லம்: மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு !

2024-25 கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது பற்றி தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:“கலைஞரின் க... மேலும் பார்க்க

கோவை தம்பதி ஆணவப் படுகொலை: குற்றவாளிக்கு மரண தண்டனை!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே தம்பதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மணமகனின் சகோதரா் வினோத் குமார் குற்றவாளி என தீா்ப்பளிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், ... மேலும் பார்க்க