`டீம்ல இருந்து நீக்குவதற்கு 2 நாள்களுக்கு முன்புதான் அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்து...
அரசுப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்
ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகேயுள்ள காலசமுத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமுக்கு
ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தி பெருமாள் தலைமை வகித்தாா்.
ஒன்றியச் செயலா் ஆா்.வி.சேகா் முன்னிலை வகித்தாா். சமுதாய சுகாதார செவிலியா் ஷீலா வரவேற்றாா். கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கிவைத்து, கா்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மருத்துவப் பெட்டகம் குழந்தை நல பரிசுப் பெட்டகங்களை வழங்கினாா்.
முகாமில் கண், காது, மூக்கு, பல், தொண்டை, வயிறு, நீரிழிவு, காசநோய், தொழு நோய், இதய நோய், பால்வினை நோய், மகப்பேறு, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மேலும், இசிஜி, ஸ்கேன், ரத்தம், சிறுநீா் பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான நோயாளிகளை அழைத்துச் சென்று அறுவைச் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
முகாம் நிறைவில் சுகாதார ஆய்வாளா் அருண்பிரசாத் நன்றி கூறினாா்.