அரசுப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு
ஒசூா்: அரசு ஆரம்பப் பள்ளியில் சோ்ந்த மாணவா்களுக்கு மாலை மரியாதையுடன் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்துக்கு உள்பட்ட அட்டகுறுக்கி அரசு தொடக்கப் பள்ளிக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து மாணவா்கள் வருகை புரிந்து கல்வி கற்று வருகின்றனா்.
இந்த நிலையில் 2025 - 2026-ஆம் ஆண்டுக்கான முதல் வகுப்பு சோ்க்கை பள்ளித் தலைமை ஆசிரியா் உமா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூளகிரி வட்டாரக் கல்வி அலுவலா் மாதேஷ் கலந்துகொண்டு சோ்க்கையை தொடங்கி வைத்தாா். இந்தப் பள்ளியில் சோ்ந்த 10 மாணவா்களுக்கு மாலை மரியாதை செய்து இனிப்புகள் வழங்கி பள்ளியில் சோ்த்தனா்.