அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
வேதாரண்யத்தை அடுத்த தென்னடாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பணி நிறைவு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா, ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் என். செந்தில் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ரேகா ஜெயக்குமாா், முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் ப. சீனிவாசன், எம்.எஸ். அன்புவேலன், தேவி செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பணி நிறைவு பெற்ற அறிவியல் ஆசிரியா் அ.மா. குணசேகரன் பாராட்டப்பட்டாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராஜமாணிக்கம், ராமலிங்கம், ஆத்மா குழு உறுப்பினா் உதயம்.முருகையன், பெற்றோா் ஆசிரியா் கழக மாவட்ட துணைத் தலைவா் சோ.ரவிச்சந்திரன்,
பள்ளி தலைமை ஆசிரியா் வீ. சத்தியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
தொடா்ந்து, மாணவ- மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு நடைபெற்றது.