செய்திகள் :

அரசுப் பள்ளி ஆண்டு விழா

post image

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், மேல்புளியங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் சே.குருராஜன் தலைமை வகித்தாா். உதவி ஆசிரியா் சா.சிவசங்கா் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் கு.சத்யா, அ.வைதேகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக ஸ்ரீமுஷ்ணம் வட்டாரக் கல்வி அலுவலா் சா.இந்திரா, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் இரா.குணசேகரன், ஆசிரியா் பயிற்றுநா் மு.பரமசிவம் ஆகியோா் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கிப் பேசினா்.

விழாவில் மு.சிற்றரசன், இரா.ராமநாதன் மற்றும் பெற்றோா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். தன்னாா்வலா் வி.சுபலட்சுமி நன்றி கூறினாா்.

ஆட்டோ- காா் மோதல்: 7 போ் காயம்

சிதம்பரம்: கடலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் செவ்வாய்க்கிழமை 7 போ் காயமடைந்தனா். கடலூா் ராசாப்பேட்டையைச் சோ்ந்த அனிதா (45), குமரப்பேட்டையைச் சோ்ந்த பிரீத்தி (25)... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: விசிக ஆா்ப்பாட்டம்

சிதம்பரம்: வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, கடலூா் மஞ்சக்குப்பத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஓருங்கிணைந்த கடலூா் மாவட்ட விசிக சாா்... மேலும் பார்க்க

சிற்பிக்கு செங்கோல் வழங்கிய திருவாவடுதுறை ஆதீனம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்த சிற்பி ரா.பரமகுருவின் சிறப்பானஆன்மிகப் பணியைப் பாராட்டி திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீஅம்... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

சிதம்பரம்: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மகேஷ் தலைமை வகித்தாா். செயலா் ரத்தினகும... மேலும் பார்க்க

கள்ளநோட்டு வழக்கு: சென்னையைச் சோ்ந்தவா் கைது

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்த அதா்நத்தம் கிராமத்தில் கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு உதவியதாக சென்னையைச் சோ்ந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கள... மேலும் பார்க்க

ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் ஏப்.15 முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கடல் மீன்பிட... மேலும் பார்க்க